- முகப்பு
- மாவட்டச் செய்தி
- ஸ்ரீபெரும்புதூர் அருகே தேர்தல் நேரத்தில் போடப்பட்ட தார் சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் சைக்கிளுடன் விழுந்த சிறுவன்.
ஸ்ரீபெரும்புதூர் அருகே தேர்தல் நேரத்தில் போடப்பட்ட தார் சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் சைக்கிளுடன் விழுந்த சிறுவன்.
லட்சுமி காந்த்
UPDATED: May 16, 2024, 11:37:13 AM
Latest Sriperumbudur News and updates in Tamil
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த கச்சிப்பட்டு பகுதியில் ஏராளமான கூலி தொழிலாளிகள் ஸ்ரீபெரும்புதூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார்கள்.
சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை ஒட்டியுள்ள இந்த பகுதியில் மக்கள் நடமாட்டம் எப்போதும் இருக்கும்.
கட்சிப்பட்டு கிராமத்தில் உள்ளே செல்கின்ற பிரதான சாலை, ஆங்காங்கே குண்டும் குழியுமாக காணப்பட்டதால், தேர்தல் அறிவித்த பின்னர், கடந்த மாதம் புதிதாக தார் சாலை போடப்பட்டது.
Kancheepuram District News
அந்த பிரதான சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் அந்த வழியே சைக்கிளில் சென்று கொண்டிருந்த சிறுவன் ஒருவன் தடுக்கி கீழே விழுந்தார்.
அதனை கண்ட சிறுவனின் சகோதரர் மற்றும் நண்பர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து சிறுவன் விழுந்த பள்ளத்தில், மரக்கொம்பு ஒன்று எடுத்து வந்து பள்ளத்தில் நட்டு வைத்து, இதுபோன்று யாரும் இந்த பள்ளத்தில் விழுந்த விடக்கூடாது என அந்த கொம்புக்கு சந்தனம் பூசி, வேப்பிலை கட்டி, சூடம் ஏற்றி வழிபட்டனர்.
அதில் ஒரு நண்பர் இதை வீடியோ எடுத்து அப்பகுதிகளில் உள்ள நண்பர்களுக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பியதால், கடகடவென அப்பகுதியில் இந்த காட்சி பரவி வருகிறது.
District News
ஒரு மாதம் கூட முடியாத நிலையில், பல லட்ச ரூபாய் மதிப்பீட்டில் அவசர அவசரமாக போட்ட இந்த தார் சாலையில் திடீரென பள்ளம் தோன்றியது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை உண்டாக்கியுள்ளது. மக்கள் அந்த சாலையில் நடந்து போகவே மிகவும் அச்சப்படுகின்றன.
எனவே சம்பந்தப்பட்ட துறையினர் இந்த சாலையை முழுவதுமாக ஆய்வு செய்து இதன் உறுதி தன்மையை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.