• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • நாகை மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் பரவலாக லேசான மழை மாவட்ட முழுவதும் வெப்ப சலனம் குறைந்து குளிர்ந்த காற்று வீசுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி.

நாகை மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் பரவலாக லேசான மழை மாவட்ட முழுவதும் வெப்ப சலனம் குறைந்து குளிர்ந்த காற்று வீசுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி.

செ.சீனிவாசன் 

UPDATED: May 8, 2024, 8:44:31 AM

தமிழகத்தில் கோடை காலம் தொடங்கி வெயிலில் தாக்கம் தொடர்ச்சியாக அதிகரித்து வந்த நிலையில் கடந்த ஒன்றரை மாதமாக வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து வந்தது

இந்த நிலையில் இரண்டு நாட்களாக அக்னி வெயிலும் தொடங்கியது இதனால் மக்கள் பெருமளவு அவதியுற்று வந்தனர் வெயிலின் தாக்கத்தால் வீட்டை விட்டு வெளியேறாமல் வீட்டுக்குள்ளே இருந்து வந்தனர்.

இந்த நிலையில் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

அதன்படி பரவலாக ஒரு சில மாவட்டங்களில் லேசான முதல் கனமான மழை பெய்து வருகிறது.

அதேபோல் நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கருமேகங்கள் சூழ்ந்து காலை முதலை குளிர்ந்த காற்று வீச தொடங்கியது குறிப்பாக நாகை, நாகூர், பணக்குடி, புத்தூர், மஞ்சகொல்லை, பொரவாச்சேரி, சிக்கல் கலசம்பாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மிதமான மழையும் 

கடலோர பகுதிகளான வேளாங்கண்ணி தெற்கு பொய்கை நல்லூர், செருதூர், பிரதாமராமபுரம், காமேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளில் லேசான மழையும் குளிர்ந்த காற்றும் வீசி வருகிறது. அதைப்போல் வேதாரணியம் திருக்குவளை தாலுகா சுற்று வட்டார பகுதிகளில் வெயிலில் தாக்கம் குறைந்து உள்ளது.

நாகை மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்து வருவதால் மாவட்டம் முழுவதும் குளிர்ந்த காற்று வீசத் தொடங்கியுள்ளது இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 

  • 1

VIDEOS

Recommended