• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • உயர் மின்னழுத்தம் கேபிள் வயர் வழியே பாய்ந்து, டிவியை பார்த்துக் கொண்டிருந்த கணவன் மனைவி மீது மின்சாரம் தாக்கி  கணவன் சம்பவ இடத்திலேயே பலி.

உயர் மின்னழுத்தம் கேபிள் வயர் வழியே பாய்ந்து, டிவியை பார்த்துக் கொண்டிருந்த கணவன் மனைவி மீது மின்சாரம் தாக்கி  கணவன் சம்பவ இடத்திலேயே பலி.

லட்சுமி காந்த்

UPDATED: May 9, 2024, 7:46:36 PM

கோடை காலம் துவங்கி வெப்ப அலைகள் வீசிக் கொண்டிருக்கும் இந்த வெப்பமான சூழ்நிலையில், மின்சார வாரியத்தின் மெத்தனப் போக்கினால் ஆங்காங்கே கம்பங்கள் சேதம் அடைந்தும் , வயர்கள் தொங்கிய நிலையிலும், ஹை வோல்டேஜ், லோ வோல்டேஜ் என மாறி மாறி ஒரு நிலைப்பாடற்ற தன்மையில் டிரான்ஸ்பார்மர்களும், கம்பங்களும் பல இடங்களில் காணப்படுகின்றது.

இதில் அவ்வப்போது அறிவிக்கப்படாத மின் வெட்டும் தொடர்கிறது. எது எப்படி இருந்த போதிலும் மின்கட்டணம் விண்ணை மூட்டும் அளவுக்கு உயர்த்தி விட்டார்கள் என பொதுமக்கள் புலம்புகின்ற நிலைக்கு விடியா திமுக அரசு தள்ளப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் அடுத்த மூன்றாம் கட்டளை ரோட்டு சாலையில் மணிகண்டன் (வயது 44) யுவராணி (வயது 39) தம்பதிகள் வசிக்கின்றனர். இவர்களுக்கு பிரவீன் குமார் (வயது 17) கிருபா (14 ) என இரண்டு பிள்ளைகள் கல்லூரி மற்றும் பள்ளியில் படித்துக் கொண்டுள்ளனர். மணிகண்டன் நகை செய்யும் தொழிலில் ஈடுபட்டுள்ளார் யுவ ராணி குடும்பத் தலைவியாக உள்ளார்.

இந்நிலையில் வீட்டில் கணவன் மனைவி தம்பதிகள் தொலைக்காட்சியை பார்த்துக் கொண்டிருந்தபோது டிவி விட்டு விட்டு படம் வந்ததால் டிவியின் பின்புறம் உள்ள கேபிளை தொட்டுள்ளனர். அப்போது உயர் மின்னழுத்தம் கேபிள் வயர் வழியே பாய்ந்து மணிகண்டன் , யுவராணி மீது தாக்கியது. 

உயர் மின்சாரம் தாக்கியதில் மணிகண்டன் சம்பவ இடத்திலேயே இறந்தார். அதேபோல அவருடைய மனைவி யுவராணியின் இடது கை முற்றிலும் எரிந்து தீக்கரையானது. ஆபத்தான நிலையில் யுவ ராணியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சை அனுமதித்துள்ளனர். 

ஏற்கனவே தெருவில் உள்ள மின்கம்பத்திலிருந்து லோ வோல்டேஜ் ஹை வோல்டேஜ் போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாகவும், இதற்கு முன்பு கேபிள் வயர் வழியே வேறொருவரை மின்சாரம் தாக்கி உள்ளதாகவும் கூறப்பட்டு வருகின்ற நிலையில் மின்வாரியத்தின் மெத்தனப் போக்கினால் மின் கம்பத்தில் உள்ள மின் உயர் மின் கம்பிகளை சரியாக பராமரிக்காமல் இருந்துவிட்டனர். 

மின்வாரிய ஊழியர்கள் இதை கண்டுகொள்ளாமல் விட்டதின் விளைவாக நகை செய்யும் பொற்கொல்லர் ஒருவர் , மனைவி மகன் மகள் ஆகியோர் கண் முன்னே தீயில் எரிந்து கரிக்கட்டையாகி இறந்து போன சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை உண்டாக்கியது.

மணிகண்டன் மின்சாம் தாக்கி இறந்த போனதற்காக மின்சார துறையினரும், கேபிள் டிவி நபர்களும் தற்போது கட்டப்பஞ்சாயத்து பேசுவதாக கூறப்படுகிறது.

 

VIDEOS

Recommended