- முகப்பு
- மாவட்டச் செய்தி
- அரசு நிதி வீணடிப்பு இராமநாதபுரத்தில் வீணாகும் மீன்பிடி உபகரணங்கள் மீனவர்களுக்கு உரிய வழிகாட்டுதல் இல்லை
அரசு நிதி வீணடிப்பு இராமநாதபுரத்தில் வீணாகும் மீன்பிடி உபகரணங்கள் மீனவர்களுக்கு உரிய வழிகாட்டுதல் இல்லை
கார்மேகம்
UPDATED: Jun 2, 2024, 12:37:00 PM
இராமநாதபுரம் மாவட்டத்தில் மீனவர்களுக்கு சரியான முறையில் மீன் வளர்ப்பு வழி காட்டுதல் இல்லாததால் மீனவர்களுக்கு அரசு மூலம் மானியமாக வழங்கிய மீன்பிடி உபகரணங்கள் கடற்கரை பகுதியில் கேட்பாரற்று வீணாக கிடக்கிறது
மீனவர்களுக்கு தேவையான உதவிகளையும் மானியங்களையும் பெற்றுக் கொடுத்து அவர்களின் வாழ்வாதாரத்திற்கு வழி காட்ட வேண்டிய பணியில் மீன்வளத்துறை உள்ளது மத்திய மாநில அரசுகள் சார்பில் வழங்கப்படும் நவீன தொழில் நுட்ப கருவிகளை மீனவர்களுக்கு வழங்கி செயல் விளக்க பயிற்சிகளை அளிக்காததால் கடலுக்குள் மீன் வளர்க்கும் திட்டம் தோல்வி அடைந்து மீனவர்கள் பயனடைய முடியாமல் கேள்விக்குறியாகி உள்ளது.
திருப்புல்லாணி அருகே களிமண் குண்டு ஊராட்சி சண்முகவேல்பட்டிணம் கடற்கரையோர பகுதியில் 7 மீ அகலத்தில் 2 மீ. உயரத்தில் வட்டவடிவ தொட்டி போன்ற மீன் வளர்க்கும் உபகரணம் வீனாக கிடக்கிறது அவற்றில் மீன் வளர்த்து பயன்படுத்துவதற்காக மீனவர்களுக்கு வழங்கியுள்ளனர்.
சன்முகவேல் பட்டினத்தில் 20 க்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகள் உள்ளன நாட்டுப் படகு மீனவர்களுக்கு கடலுக்குள் ஒரு நாட்டிக்கல் கடல் மைல் தொலைவிற்குள் தொட்டி முறையில் மீன் வளர்க்கும் தொழில் நுட்பங்களை அளிக்காததால் பல லட்சம் மதிப்பிலான 5 க்கும் மேற்பட்ட தொட்டி வலைகள் கடலோரத்தில் பயன்பாடின்றி வீனாக கிடக்கின்றன
இது குறித்து சன்முகவேல்பட்டிணம் மீனவர் கூறியதாவது மீன்வளத்துறை சார்பில் பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டு அவை மானிய அடிப்படையில் மீனவர்களுக்கு வழங்கப்படுகிறது
ALSO READ | அதிமுக டிடிவி தினகரன் கட்டுப்பாட்டில் வருமா ?
அதில் இவ்வாறு கடலுக்குள் குறிப்பிட்ட ஆழத்தில் தொட்டி வடிவ மீன் வளர்க்கும் முறைக்கான மீன்பிடி உபகரணங்களை எவ்வாறு பயன்படுத்துவது என்று முறையான தொழில் நுட்ப வழிகாட்டுதல் மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு தெரியவில்லை அதனால் அவர்கள் மீனவர்களுக்கும் பயிற்சி அளிக்கவில்லை என்றார்
இந்த வட்டவடிவ மீன் வளர்க்கும் முறை குறித்து எந்தவிதமான பயிற்சியும் நடத்தப்படவில்லை இதனால் இத்திட்டத்தின் நோக்கம் கேள்விக் குறியாகி அரசு நிதி வீணடிப்பு செய்யப்படுகிறது
எனவே இராமநாதபுரம் மாவட்ட மீன்வளத்துறையினர் அரசு நிதி வீணடிப்பை தவிர்க்க உரிய முறையில் வழிகாட்டுதலையும் மானிய விபரங்களையும் தெரிவித்து மீனவர்கள் பயனடைய வழி செய்ய வேண்டும் என்றும் கூறினார்.