• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் ஈவிஎம் மெஷின் தான் வெற்றிபெற்றுள்ளது பிஜேபி அல்ல - திருவாரூர் மாவட்ட தலைவர் துரைவேலன்

நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் ஈவிஎம் மெஷின் தான் வெற்றிபெற்றுள்ளது பிஜேபி அல்ல - திருவாரூர் மாவட்ட தலைவர் துரைவேலன்

தருண்சுரேஷ்

UPDATED: Jun 20, 2024, 8:09:50 AM

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே ராணிதோப்பு பகுதியில் மாவட்டகாங்கிரஸ் சார்பில் அகிலஇந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ராகுல்காந்தி 54 ஆவது பிறந்தநாள் விழா , 101 பாராளுமன்ற தொகுதி வெற்றிபெற்ற விழா , இளைஞர் காங்கிரஸ் கமிட்டி மாவட்ட பொதுச் செயலாளர் தீரன்ஆசைதம்பி பெட்ரோல் பங்க் திறப்புவிழா என முப்பெரும் விழா திருவாரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் எஸ்எம்பி. துரைவேலன் தலைமையில் நடைபெற்றது

இவ்விழாவில் ராகுல்காந்தியின் 54 வது பிறந்த நாளையொட்டி மகாத்மா காந்தியின் உருவம் , ராகுல்காந்தி உருவம் பொறிக்கப்பட்ட கேக்கினை வெட்டி பிறந்தநாள் விழாவை திருவாரூர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் கொண்டாடினர் ,

இதனைத்தொடர்ந்து திருவாரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் எஸ்எம்பி. துரைவேலன் பேசியதாவது நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் ஈவிஎம் மெஷின் தான் வெற்றி பெற்றுள்ளது , வெற்றி பெற்றது பிஜேபி அல்ல , தேர்தல் அறிவிப்புகள் 12 மணி வரை சரியாக சென்றது , 12.30 மணி அளவில் தேர்தல் முடிவுகள் ஹேங்கானது , மோடி தேர்தல் முடிவுகளில் பின்தங்கி இருந்தார் ,

பின்னர் அவர்களது வேலையை ஆரம்பித்து விட்டனர் , கண்டிப்பாக பிஜேபி வெற்றி பெறவில்லை , ஈவிஎம் மெஷின் தான் வெற்றி பெற்றுள்ளது என்பது என் கருத்து ராகுல் காந்தியின் உழைப்பு போல் யாராலும் உழைக்க முடியாது , ஆனாலும் மத்தியில் நம் ஆட்சி பெற முடியவில்லை , நமக்கு நம்பிக்கை இருக்கின்றது ,

பிஜேபி ஆட்சி இன்னும் 10 மாத காலம் நடைபெறும் என நினைக்கின்றேன் , 10 மாதத்திற்கு பிறகு ராகுல் ஆட்சியை கைப்பற்றுவார் ,ராகுல்காந்தி பாரதப்பிரமாத வருவார் என்ற முழு நம்பிக்கை இருக்கிறது என பேசினார் ,இதில் காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ,தொண்டர்கள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

 

VIDEOS

RELATED NEWS

Recommended