• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலையில் கன மழையின் காரணமாக அய்யனார் கோயில் ஆற்றில் நீர் வரத்து அதிகரிப்பு. 

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலையில் கன மழையின் காரணமாக அய்யனார் கோயில் ஆற்றில் நீர் வரத்து அதிகரிப்பு. 

அந்தோணி ராஜ்

UPDATED: May 15, 2024, 6:36:06 AM

District News

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலையில் நேற்று பிற்பகலில் அய்யனார் கோயில், பிறாவடியார் மற்றும் கோட்டை மலை பீட்டுகளில் கன மழை பெய்தது. 

இதன் காரணமாக நள்ளிரவில் நீராவி அருவி மற்றும் மலையடிவாரத்தில் உள்ள அய்யனார் கோவில் ஆற்றில் வரும் தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளது.

Latest District News

ஆற்றின் குறுக்கே குடிநீருக்காக கட்டப் பட்டுள்ள தடுப்பணையையும் தாண்டி நீர் செல்வதால், தண்ணீர் குறையும் வரை ஆற்றை கடந்து அய்யனார் கோயிலுக்கு செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

ஆற்றில் தண்ணீர் அதிகரித்ததை தொடர்ந்து நகராட்சி குடிநீர் தேக்கத்திற்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளது. நேற்று 12 அடியாக இருந்த தண்ணீரின் அளவு இன்று ஒரே நாளில் ஒரு அடி உயர்ந்து தற்போது 13 அடியாக உள்ளது.

Today District News

மேலும் தேக்கத்திற்கு தண்ணீர் தொடர்ந்து வந்து கொண்டிருப்பதால், மேலும் அளவு அதிகரிக்கும் என்பதால் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் தடுப்பணையை தாண்டி செல்லும் தண்ணீர் முடங்கியாறு வழியாக நகரை சுற்றி உள்ள முக்கிய விவசாய கண்மாய்கள் மற்றும் நீர் நிலைகளுக்கு செல்வதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 

VIDEOS

Recommended