• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • இராமநாதபுரம் மாவட்டத்தில் தினமும் பல மணிநேரம் பி.எஸ்.என்.எல்.இணைய சேவை துண்டிப்பால் மக்கள் அவதி

இராமநாதபுரம் மாவட்டத்தில் தினமும் பல மணிநேரம் பி.எஸ்.என்.எல்.இணைய சேவை துண்டிப்பால் மக்கள் அவதி

கார்மேகம்

UPDATED: May 10, 2024, 5:53:48 AM

இராமநாதபுரம்  மற்றும் சிவகங்கை மாவட்டங்களை ஒருங்கிணைத்து காரைக்குடியில் பி.எஸ்.என்.எல். அலுவலகம் செயல்பட்டு வருகிறது 

இந்த அலுவலகத்தின் கட்டுப் பாட்டின் கீழ்‌ ஒன்றை லட்சம் செல்போன் வாடிக்கையாளர்களும் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தரைவழி தொலைபேசி இணைப்புகளும் ஏறத்தாழ 20 ஆயிரம் பிராட்பேண்ட் ஆப்டிக் கல் பைபர் இணைய இணைப்புகளும் உள்ளன

தனியார் செல்போன் மற்றும் இணைய இணைப்புகள் அதிக அளவில் வந்திருந்தாலும் பி.எஸ்.என்.எல். செல்போன் இணைப்புகளையும் குறிப்பாக அதிவேக பிராட்பேண்ட் இணைய  இணைப்புகளையும் மக்கள் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர்

இந்நிலையில் கடந்த சில நாட்களாக காரைக்குடி பி.எஸ்.என்.எல். அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ராமநாதபுரம் மாவட்டத்தில் பி.எஸ்.என்.எல் பிராட் பேண்ட் இணைப்புகள் அடிக்கடி இணைய சேவை துண்டிக்கப் பட்டு வருகிறது

பல மணிநேரங்கள் பிராட்பேண்ட் இணைய இணைப்புகள் துண்டிக்கப்பட்டு வருவதால் இணைய இணைப்பு பெற்றுள்ள  வாடிக்கையாளர்கள்‌ சொல்ல முடியாத அவதி அடைந்து வருகின்றனர்.

இது குறித்து பி.எஸ்.என்.எல். அதிகாரிகளிடம் கேட்டபோது பல்வேறு பகுதிகளில் குடிநீர் குழாய்கள் பதிக்க குழி  தோண்டி வருவதால் ஆப்டிக்கல் பைபர் வயர்கள் துண்டிக்கப் படுவதாகவும்

அதனால் இந்த இணைய இணைப்பு துண்டிப்பு ஏற்படுவதாகவும் தெரிவித்தனர் குறிப்பாக நேற்று ராமநாதபுரத்தில் பிற்பகலில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக இணைய இணைப்பு துண்டிக்கப்பட்டதால் வாடிக்கையாளர்கள் சொல்ல முடியாத அவதி அடைந்தனர்.

வங்கிகளில் இணைய வசதி துண்டிக்கப்பட்டு வங்கி சேவை ஏடி.எம்.-களில் பண பரிமாற்றம் துண்டிக்கப்பட்டது

மொபைல் மற்றும் நெட் பேங்க்கிங்‌ ஜிபே பண பரிவர்த்தனைகள் பாதிக்கப்பட்டது

இது குறித்து பி.எஸ்.என்.எல் உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பழுதுகளை உடனுக்குடன் சரி செய்து இணைப்பினை சீராக்க வேண்டும் என்று வாடிக்கையாளர்கள்‌ கோரிக்கை விடுத்துள்ளனர். 

 

VIDEOS

Recommended