திருவேற்காட்டில் விபத்து இல்லாத தமிழ்நாடு என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி.

சுந்தர்

UPDATED: May 21, 2024, 2:05:59 PM

சென்னை, திருவேற்காடு அடுத்த அயனம்பாக்கத்தில் விபத்து இல்லாத தமிழ்நாடு என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று முன்தினம் தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. 

இந்த நிகழ்ச்சியில் அயனம்பாக்கம் வட்டார மண் உபகரணங்கள் மற்றும் டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் ஏ.எம். விஜயகுமார், பொதுச்செயலாளர் எம்.கே. ஜெயக்குமார் ஆகியோர் தலைமை தாங்கினர். 

தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் யுவராஜ், பூந்தமல்லி லாரி சங்க தலைவர் சுப்பிரமணி, கோயம்பேடு லாரி சங்க தலைவர் துபாய் ராஜ் , திருவள்ளூர் லாரி சங்க தலைவர் சதீஸ், ,ரெட்ஹில்ஸ் லாரி சங்க தலைவர் காமராஜ், அமைந்தைகரை லாரி சங்க தலைவர் சத்யா மற்றும் வினோத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

அயனம்பாக்கம் வட்டார மண் உபகரணங்கள் மற்றும் டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கம், டிவிஎஸ் மொபிலிட்டி மற்றும் அசோக் லேலண்ட் இணைந்து நடத்திய இந்த விபத்தில்லா தமிழ்நாடு என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் திருவள்ளூர், திருவேற்காடு, பூந்தமல்லி, கோயம்பேடு, ரெட்ஹில்ஸ் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த சுற்றுவட்டார லாரி உரிமையாளர்கள், ஓட்டுநர்கள், கிளீனர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

இதில் திருவேற்காடு சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் விஜய் கிருஷ்ணராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு விபத்தில் இல்லாமல் வாகனங்களை இயக்குவது குறித்தும், ஓட்டுநர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்தும் விரிவாக விளக்கிப் பேசினார்.

இதனைத் தொடர்ந்து சாலை விதிகளை மதித்து வாகனங்களை இயக்குவது, ஓட்டுநர்கள் சீருடை கட்டாயம் அணிவது, அதிக வேகமாக வாகனங்களை இயக்கக் கூடாது, மது அருந்தி விட்டு வாகனங்களை கண்டிப்பாக இயக்கக் கூடாது, வாகனங்களுக்கு உரிய ஆவணங்களை கட்டாயம் வைத்திருப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

VIDEOS

Recommended