சுற்றுலா வந்த கல்லூரி மாணவர் டிராக்டர் வாகன விபத்தில் பலி.

ராஜா

UPDATED: May 17, 2024, 7:10:21 PM

தேனி மாவட்டம் சின்னமனூரை அருகே அமைந்துள்ள மேகமலைக்கு காரைக்கால் தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் 8 பேர் ஒரு கார், 3 இருசக்கர வாகனங்களில் சுற்றுலா வந்திருந்தனர்.

அப்போது மலைச் சாலையில் தேயிலை தோட்ட வேலைக்காக சென்று கொண்டிருந்த டிராக்டரில் சுற்றுலா வந்திருந்த புதுச்சேரி காரமணிகுப்பம்  பைன் கேர் தெருவில் வசிக்கும் சாமிநாதன் என்பவரின் மகன் அரவிந்த் வயது 21 என்ற கல்லூரி இறுதி ஆண்டு படிக்கும் மாணவரும்

அவருடன் அதே கல்லூரியில் படிக்கும் தக்ஷன் என்ற மாணவரும் ஏறி செல்ல விருப்பம் தெரிவித்ததன் பேரில் டிராக்டர் ஓட்டுநரான தேனி கரட்டிப்பட்டியை சேர்ந்த ஆஸ்டின் 37 என்பவர் இருவரையும் ஏற்றுக்கொண்டு மலைச்சாலையில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக டிராக்டர் கவிழ்ந்ததில் சம்பவ இடத்திலேயே கல்லூரி மாணவர் அரவிந்த் பலியானார். 

உடன் சென்ற மாணவர் தர்ஷன் சிறு காயங்களுடன் உயிர்தப்பினார். மேலும் டிராக்டர் ஓட்டுனர் ஆஸ்டின் படுகாயமடைந்தார்.

உடனே ஹைவேவிஷ் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதன் பேரில் 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்கப்பட்டு மூவரும் சின்னமனூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். 

அங்கு இறந்த கல்லூரி மாணவர் அரவிந்தன் உடல் உடற்கூராய்வுக்காக அனுப்பப்பட்டது. 

மேலும் படுகாயங்களுடன் இருந்த டிராக்டர் டிரைவர் ஆஸ்டின் முதலுதவிகிச்சைக்கு பின்பு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

உடன் சென்ற மாணவர்களுக்கு நடந்த விபத்து நடந்த விடயம் பின்பு தெரிய வந்ததைத் தொடர்ந்து அனைவரும் சின்னமனூர் அரசு மருத்துவமனையில் என்ன செய்வது என்பது அறியாமல் உடன் வந்த ஒரு மாணவர் இறந்து விட்ட சூழலில் அழுதது அங்கிருந்தவர் களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் இது குறித்து இறந்த மாணவரின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் சின்னமனூர் போலீசார் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

 

VIDEOS

Recommended