• முகப்பு
  • குற்றம்
  • தேர்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் மூவர், அதில் கிராம அபிவிருத்தி சங்கத் தலைவர் உட்பட, பொலிஸாரால் கைது

தேர்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் மூவர், அதில் கிராம அபிவிருத்தி சங்கத் தலைவர் உட்பட, பொலிஸாரால் கைது

முல்லை கதிர்

UPDATED: Sep 4, 2024, 6:48:35 AM

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கைவேலி 1ம் வட்டாரம், மருதமடு பகுதியில், தேர்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் மூவர், அதில் கிராம அபிவிருத்தி சங்கத் தலைவர் உட்பட, பொலிஸாரால் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களால், தேர்தல் விதிகளை மீறி மக்கள் ஒரே இடத்தில் கூடவழிககப்பட்டு, காணி இல்லாதவர்களுக்கு காணி வழங்குவது, வேலை வாய்ப்புகளை பெற்றுக் கொடுக்க வேண்டும் என வாக்குறுதிகளை கூறி, மக்கள் தொகையில் இருந்து 200 ரூபா வசூல் செய்யப்பட்டு, ஐக்கிய தேசியக் கட்சியினரால் படிவம் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.

சம்பவத்தைத் தொடர்ந்து, முல்லைத்தீவு மாவட்ட தேர்தல் அலுவலக அதிகாரிகளும், புதுக்குடியிருப்பு பொலிஸாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அவர்கள் வைத்திருந்த படிவங்களை பறிமுதல் செய்ததுடன், ஐக்கிய தேசியக் கட்சியினை சேர்ந்த இருவரும், வீட்டு உரிமையாளரும் உட்பட மூவரை கைது செய்து, புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

original/img-20240901-wa0070
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

VIDEOS

Recommended