• முகப்பு
  • குற்றம்
  • குன்றத்தூரில் நடுரோட்டில் வாலிபர்கள்  சரமாரியாக தாக்கி கொண்டதால் பரபரப்பு.

குன்றத்தூரில் நடுரோட்டில் வாலிபர்கள்  சரமாரியாக தாக்கி கொண்டதால் பரபரப்பு.

S.முருகன்

UPDATED: Apr 21, 2024, 12:47:28 PM

குன்றத்தூரில் இருந்து நாகாத்தம்மன் கோவில் செல்லும் சாலையில் நேற்று முன் தினம் இரவு வாலிபர்கள் இரண்டு தரப்பினருக்குள் ஏற்பட்ட மோதலில் நடுரோட்டில் பொதுமக்கள் மத்தியில் மாறி, மாறி தாக்கி கொண்டனர்.

இதனை கண்டதும் அங்கிருந்த பொதுமக்கள் செய்வதறியாமல் திகைத்து நாலா புறமும் சிதறி ஓடினார்கள்.

இரு தரப்பு வாலிபர்கள் விடாமல் சரமாரியாக மாறி மாறி தாக்கி கொண்டதில் வாலிபர்கள் சிலருக்கு ரத்தம் வடிந்தது இருப்பினும் விடாமல் பொதுமக்கள் முன்னிலையில் நடுரோட்டில் ஓட ஓட விரட்டியபடி மாறி மாறி தாக்கி கொண்டனர் 

இது குறித்து அங்கிருந்த பொதுமக்கள் குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில் சம்பவ இடத்திற்கு போலீசார் வருவதை அறிந்து சாலையில் தாக்கி கொண்ட நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடினார்கள்.

இருப்பினும் போலீசார் விடாமல் விரட்டிச் சென்று அதில் சிலரை மடக்கி பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இதில் நேற்று முன் தினம் குன்றத்தூரில் நடந்த கோவில் தேர் திருவிழாவில் வாலிபர்கள் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் சாலையில் நடுரோட்டில் மாறி மாறி தாக்கி கொண்டது தெரியவந்தது

இந்த சம்பவம் குறித்து குன்றத்தூர் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நடுரோட்டில் பொதுமக்கள் முன்னிலையில் வாலிபர்கள் இரு தரப்பாக மோதிக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

  • 3

VIDEOS

Recommended