காஞ்சிபுரம் மாநகரின் பல்வேறு பகுதிளில் யமாஹா, ராயல் என்பீல்ட் போன்ற விலை உயர்ந்த இருசக்கர வாகனங்களை குறி வைத்து திருடிய திருடன்.
லட்சுமி காந்த்
UPDATED: May 13, 2024, 3:09:32 PM
District News In Tamil
காஞ்சிபுரம் மாவட்டம் சிவகாஞ்சி காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட காஞ்சிபுரம் மாநகரப் பகுதிகளில் கடந்த ஒரு மாத காலமாக தொடர் இருசக்கர வாகன திருட்டு சம்பந்தமாக போலீசாருக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தது.
குறிப்பாக மாநகரப் பகுதிகளில் யமஹா R15,ராயல் என்பீல்ட் புல்லட்,யமாஹா ஆர்.எக்ஸ் 100 போன்ற விலை உயர்ந்த இருசக்கர வாகனங்கள் திருடப்பட்டு வந்ததையடுத்து, இப்புகார்களின் மீது நடவடிக்கை எடுக்கும் விதமாக,
சிவகாஞ்சி காவல் நிலைய ஆய்வாளர் அண்ணாதுரை தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, காஞ்சிபுரம் மாநகரில் இரு சக்கர வாகனங்கள் திருட்டு சம்பவங்கள் நடைபெற்ற இடங்களில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் காஞ்சிபுரம் ஒலிமுகமதுபேட்டை பகுதியை சேர்ந்த தரணிதரன் (வயது 22) என்ற இளைஞன் தான் இந்த தொடர் வாகன திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
அதனையடுத்து இளைஞன் தரணிதரனை கைது செய்த போலீசார் அவனிடமிருந்து யமஹா R15,ராயல் என்பீல்ட் புல்லட்,யமாஹா ஆர்.எக்ஸ் 100 உள்ளிட்ட 7 விலை உயர்ந்த இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
அதனைதொடர்ந்து கைது செய்யப்பட்ட தரணிதரணை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்பு வேலூர் மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர்.