• முகப்பு
  • குற்றம்
  • சிவகாசியில் ஓட்டுநர் பீர் பாட்டிலால் குத்தி கொலை செய்யபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...!அதிகாலையில் மர்ம கும்பல் வெறிச்செயல்.

சிவகாசியில் ஓட்டுநர் பீர் பாட்டிலால் குத்தி கொலை செய்யபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...!அதிகாலையில் மர்ம கும்பல் வெறிச்செயல்.

அந்தோணி ராஜ்

UPDATED: May 5, 2024, 11:40:12 AM

சிவகாசி அருகே நாரணாபுரம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சுரேஷ்( வயது 36). இவர் தனியார் பேருந்து ஓட்டுனராக பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில் இன்று அதிகாலை சிவகாசியிலிருந்து சாத்தூர் செல்லும் சாலையில், தனியார் கண் மருத்துவமனையின் பின்புறம் ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு கட்டிடத்தின் அருகே பிணமாகசடலமாக கிடந்தார்.

தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிரேதத்தை கைப்பற்றி உடற் கூராய்வுக்காக விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் வாகனம் மூலமாக அனுப்பி வைத்தனர்.

போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் சுரேஷ் அடையாளம் தெரியாத மர்ம கும்பலுடன் ஏற்பட்ட பிரச்சனையில் பீர் பாட்டிலால் கழுத்து, முகம், வயிற்றில் குத்தப்பட்டு சுரேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதும், முன் விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டிருக்கலாம் என தெரிவித்தனர்.

மேலும் கொலை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள சிவகாசி கிழக்கு பகுதி போலீசார் கொலை நடந்ததற்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வரும் நிலையில், தப்பியோடிய கொலையாளிகளை வலை வீசித் தேடி வருகின்றனர்.

கொலை செய்யப்பட்ட சுரேஷுக்கு மகேஸ்வரி என்ற மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர்.

 

  • 3

VIDEOS

Recommended