கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவரை பசறை பொலிஸ் கைது செய்தனர்

ராமு தனராஜா

UPDATED: Apr 25, 2024, 3:23:20 PM

நேற்று மாலை பசறை படல்கும்புர வீதியின் கமவெல பகுதியில் 3000 மில்லிகிராம் கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவரை பசறை பொலிஸரார் கைது செய்துள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.

 கமவெல சந்தியில் பொலிஸாரின் ‌‌அமைக்கப்பட்டுயிருந்த சோதனை சாவடியில் சோதனையில் ஈடுப்பட்டிருந்த பொலிஸாரினால் குறித்த வீதியின் ஊடாக சென்றுகொண்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்றை மறித்து சோதனைக்கு உட்படுத்திய போது முச்சக்கர வண்டி சாரதியின் கால்சட்டை பையில் வைத்திருந்த கஞ்சா போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அத்தோடு பதுளை கந்தகொல்ல பகுதியை சேர்ந்த 22 வயதுடைய சந்தேக நபர் ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, ​​கஞ்சா படல்கும்புர பகுதியில் இருந்து கொண்டு வந்ததாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.,

சந்தேக நபரிடம் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் விசாரணைகளின் பின்னர் இன்றைய தினம் பசறை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்

  • 4

VIDEOS

Recommended