• முகப்பு
  • குற்றம்
  • வெற்றி கொடி கட்டு படம் பாணியில் வெளிநாட்டு வேலை வாங்கித் தருவதாக கூறி கோடிக்கணக்கில் மோசடி

வெற்றி கொடி கட்டு படம் பாணியில் வெளிநாட்டு வேலை வாங்கித் தருவதாக கூறி கோடிக்கணக்கில் மோசடி

JK

UPDATED: Nov 23, 2024, 9:23:20 AM

திருச்சி

கே கே நகர் பகுதியில் அக்ஷயா அசோசியட்ஸ் அண்ட் டிராவல்ஸ் வெளிநாடுகளில் வேலை வாய்ப்பு தரும் நிறுவனத்தை பத்மாவதி,மற்றும் சரவணகுமார் என்பவர் நடத்தி வந்தனர்.

இவர்கள் ஆஸ்திரேலியா கனடா அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் வேலைவாய்ப்பு தருவதாக கூறி திருச்சி தஞ்சை பட்டுக்கோட்டை புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 10 கோடிக்கு மேல் சுமார் 80 க்கு மேற்பட்ட நபர்களிடம பணங்களை பெற்றுக்கொண்டு போலி ஆவணங்களை கொடுத்துள்ளனர்.

ஆனால் பணம் கொடுத்தும் வேலை கிடைக்காததால் மேலும் அந்த நிறுவனத்தினரிடம், பணத்தைக் கேட்கும் போது கொலை மிரட்டல் விடுவதாக கூறி உள்ளனர்.

Breaking News In Tamil

இது குறித்து திருச்சி பொருளாதார குற்றப்பிரிவில் சுமார் பாதிக்க பட்டோர் 30க்கும் மேற்பட்டோர் புகார் செய்தனர்.

புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். புகாரின் அடிப்படையில் கணேசன் மற்றும் பத்மாவதி ஆகியோரை காவல்துறை கைது செய்துள்ளனர். 

Scam

மேலும் இந்த புகார் தொடர்பாக பாரதி என்ற நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

மேலும் பணம் கொடுத்தவர்கள் பத்மாவை தொடர்பு கொண்டு பேசிய போது கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

 

VIDEOS

Recommended