• முகப்பு
  • குற்றம்
  • திருவண்ணாமலையில் வீடு புகுந்து நகை மற்றும் ரொக்கம் திருட்டு.

திருவண்ணாமலையில் வீடு புகுந்து நகை மற்றும் ரொக்கம் திருட்டு.

அஜித் குமார்

UPDATED: May 22, 2024, 7:24:47 PM

திருவண்ணாமலை செல்வ விநாயகர் நகர் பகுதி 5 ஆவது தெருவில் சுந்தரமூர்த்தி மகன் ஆனந்தன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சி என் சி வுட் ஒர்க் செய்து வருகிறார். ஆனந்தனுக்கு திருமணமாகி மூன்று மாதங்களே ஆன நிலையில் உறவினர்கள் வீட்டிற்கு பெங்களூருக்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக சென்றுள்ளார்.

இந்நிலையில் வீடு பூட்டப்பட்டு இருப்பதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் தங்களுடைய கைவரிசையை காட்டியுள்ளனர்.

வீட்டில் முன்பக்க கதவை உடைத்து முடிந்து பீரோவில் இருந்த 9.5 பவுன் நகை மற்றும் ரூபாய் 4000 ரொக்க பணத்தை திருடியுள்ளனர்.

தொடர்ந்து பக்கத்து வீட்டில் சாப்ட்வேர் இன்ஜினியர் பார்த்திபன் என்பவரது வீட்டிலும் யாரும் இல்லாததை அறிந்த மர்ம நபர்கள் முன்பக்க கதவை உடைத்து உள்ளே சென்று பீரோவை உடைத்து திருட முயற்சி செய்துள்ளனர் ஆனால் அந்த வீட்டில் எதுவும் கிடைக்காததால் அங்கிருந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றுள்ளனர்.

அந்த வீட்டில் பார்த்திபன் தாய் தந்தையர் மட்டுமே இருந்து வந்த நிலையில் தந்தை உயிரிழந்ததை அடுத்து தனது தாயாரை பார்த்திபன் சென்னைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

திருவண்ணாமலைக்கு வரும்போது மட்டும் தான் பார்த்திபன் தனது வீட்டில் தங்கி விட்டு செல்வாராம், அதனால் அங்கு எந்த பொருளும் இல்லைவீடு திறந்து இருப்பதை பார்த்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஆனந்தனின் தந்தைக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

அவர்களின் தகவலின் பெயரில் அங்கு வந்து பார்த்தபோது வீட்டில் பீரோ உடைக்கப்பட்டு நகை திருடு போயிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலையத்தில் ஆனந்தனின் தந்தை சுந்தரமூர்த்தி புகார் அளித்ததின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகை தடையங்களையும் சேகரித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரே நேரத்தில் இரு வீடுகளில் மர்ம நபர்கள் கைவரிசை காட்டியுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

 

VIDEOS

Recommended