• முகப்பு
  • குற்றம்
  • தேனி மாவட்டம் கூடலூரில் தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பெண் உட்பட நான்கு பேர்

தேனி மாவட்டம் கூடலூரில் தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பெண் உட்பட நான்கு பேர்

ராஜா

UPDATED: Aug 7, 2024, 2:34:18 PM

தேனி மாவட்டம் கம்பம்

அருகே உள்ள கூடலூர் 18-ஆம் கால்வாய் கரை பகுதியில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக வடக்கு காவல் நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

கஞ்சா

அதனடிப்படையில் போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொண்டதில் பதினெட்டாம் கால்வாய் கரை பகுதியில் ரூபாய் 1 லட்சத்து 35 ஆயிரம் மதிப்பிலான சுமார் 7 கிலோ கஞ்சாவை விற்பனை செய்வதற்காக கொண்டு வந்தது தெரிய வந்துள்ளது.

Latest News on Theni District

இதை அடுத்து கம்பம் கோம்பை ரோட்டை சேர்ந்த மாயி (46), கம்பம் மந்தையம்மன் கோயில் தெருவை சேர்ந்த விஸ்வநாதன் (22), கம்பம் கோம்பைரோட்டைச் சேர்ந்த சின்னசாமி (62) மற்றும் கூடலூர் எல்லை தெருவை சேர்ந்த மாயத்தேவர் மனைவி அமுதா (48) ஆகிய நான்கு பேர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்த போலீசார்

Theni News & Live Updates

மேலும் தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பது தெரியவந்து அவர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது நடவடிக்கை எடுத்து சிறையில் அடைத்துள்ளனர்.

கூடலூர் வடக்கு காவல் நிலைய போலீஸாரின் இந்த துரித நடவடிக்கை சம்பவம் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

 

VIDEOS

Recommended