• முகப்பு
  • குற்றம்
  • அரசு மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த தனியார் பள்ளி ஆசிரியர்.

அரசு மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த தனியார் பள்ளி ஆசிரியர்.

பரணி

UPDATED: May 22, 2024, 1:00:44 PM

இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அரசு மருத்துவமனை மீது வெடிகுண்டு வீசப்படும் அங்கு வெடிகுண்டு வைக் கப்பட்டுள்ளது என்று சென்னையில் உள்ள போலீஸ் கட்டுப்­பாட்டு அறை எண் 100 க்கு தொடர்ந்து பத்துக்கும் மேற்பட்ட தடவை ஆண் ஒருவர் தொடர்ந்து தகவல் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து அரக்கோணம் டிஎஸ்பி வெங்கடேசன் மற்றும் போலீசார் அரசு மருத்துவ மனையில் மெட்டல்டிடெக்டர் வைத்து சோதனை நடத்தினர். அங்கு எந்தவித வெடிகுண்டும் இல்லை. அது புரளி என்பது தெரிந்தது .

அதைத்தொட ர்ந்து எண் 100க்கு போன் செய்த செல்போன் எண்ணை வை த்து விசாரணை நடத்தியதில் சென்னை பழைய பல்லாவரத்தை சேர்ந்த கேசவன் (50) என்பதும், அவரது சொந்த ஊர் அரக்கோணம் அடுத்த குன்னத்தூர் கிராமம் இவர் சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் பள்ளி முதுகலை ஆசிரியர் என்பது தெரிந்தது.

போலீசார் அவரை கைது செய்தனர். கேசவனுக்கு சிறுமூளையில் ஆபரேஷன் செய்யப்பட்டுள்ளது. அதனால் அவர் ஒரு மாதிரியாக உள்ளார் என்று டிஎஸ்பி வெங்கடேசன் தெரிவித்தார்.

மேலும் தனது நண்பரான தட்சிணாமூர்த்தி என்பவரிடம் கேசவன் ரூபாய் 2 லட்சம் கடன் வாங் கி உள்ளார். கடன் பணத்தை தட்சிணாமூர்த்தி கேட்ட நிலையில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்க இவரும் உடந்தை என்று போலீஸிடம் கேசவன் தெரிவித்துள்ளார்.

அதனால் தட்சிணாமூர்த்தியையும் போலீசார் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து விசாரித்தனர். இந்த சம்பவம் அரக்கோணத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

VIDEOS

Recommended