• முகப்பு
  • சென்னை
  • யார் ஆட்சியில் இருந்தாலும் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுப்பவர்கள் யாரக இருந்தாலும் தண்டனை வழங்க வேண்டும்.

யார் ஆட்சியில் இருந்தாலும் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுப்பவர்கள் யாரக இருந்தாலும் தண்டனை வழங்க வேண்டும்.

ஆனந்த்

UPDATED: Aug 20, 2024, 7:29:59 PM

சென்னை விருகம்பாக்கத்தில்

இந்திய நாட்டின் முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்த நாளை முன்னிட்டு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியானது காங்கிரஸ் கட்சியின் ஆராய்ச்சி துறை மாநில பொதுச் செயலாளர் சிவராமகிருஷ்ணன் ஏற்பாட்டில் நடந்தது.

இதில் சிறப்பு விருந்தினராக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளர் மருத்துவர். செல்லக்குமார் [முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்] சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்புரை ஆற்றினார்.

Latest Chennai District News 

இதில் ஆராய்ச்சி துறை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவர் மாணிக்கவாசகம் உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் மகளிர் அணியினர், தொண்டர்கள் ,மாவட்ட, பகுதி, வட்ட, கழக நிர்வாகிகள் மற்றும் அனைத்து அணி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

முன்னதாக பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி மத்திய அரசை வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர் விருகம்பாக்கம்- கோயம்பேடு சாலையில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் கையில் ஜோதி ஏந்தி நடைபயணம் மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஏழை எளிய மக்கள் உட்ப்பட 500 பேருக்கு மதிய உணவாக அன்னதானம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மு.எம்.பி பேட்டி;

யார் ஆட்சியில் இருந்தாலும் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுப்பவர்கள் யாரக இருந்தாலும் தண்டனை வழங்க வேண்டும் எனவும் அதே போல் சில அரசியல்வாதிகளால் குற்றவாளிகள் சட்ட ஓட்டையில் தப்பி விடுகின்றனர் எனவே அவர்கள் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என பேட்டியளித்தார்.

 

VIDEOS

Recommended