• முகப்பு
  • சென்னை
  • பூந்தமல்லி அருகே திடீரென பிரேக் பிடித்ததால் தனியார் பேருந்தில் இருந்து கீழே விழுந்து கண்டக்டர் பலி.

பூந்தமல்லி அருகே திடீரென பிரேக் பிடித்ததால் தனியார் பேருந்தில் இருந்து கீழே விழுந்து கண்டக்டர் பலி.

சுந்தர்

UPDATED: May 5, 2024, 6:49:22 PM

வந்தவாசியை சேர்ந்தவர் முருகன்(50), பூந்தமல்லியில் இருந்து காஞ்சிபுரம் செல்லும் தனியார் பஸ்சில் கண்டக்டராக வேலை செய்து வந்தார்.

நேற்று பூந்தமல்லியில் இருந்து காஞ்சிபுரம் நோக்கி தனியார் பேருந்து சென்று கொண்டிருந்த நிலையில் தனியார் பேருந்தை டிரைவர் சகாதேவன்(49), ஓட்டி சென்றார் பேருந்து படிக்கட்டில் கண்டக்டர் முருகன் நின்று கொண்டிருந்தார்.

பூந்தமல்லி நெடுஞ்சாலை திருமழிசை கூட்டு சாலை அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென பேருந்து பிரேக் பிடிக்கப்பட்ட நிலையில் நிலைத்தடுமாறி கண்டக்டர் முருகன் பேருந்தில் இருந்து கீழே விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் மயங்கினார்.

இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு பூந்தமல்லியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு பரிசோதனை செய்து டாக்டர்கள் முருகன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்

இது குறித்து ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்து போன முருகன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

வேகமாக சென்ற நிலையில் திடீரென்று பிரேக் பிடிக்கப்பட்ட போது பேருந்தில் இருந்து கீழே விழுந்து கண்டக்டர் இறந்து போன சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதேபோல் தனியார் பேருந்தில் இருந்து கீழே விழுந்து கண்டக்டர் ஒருவர் இறந்து போனது குறிப்பிடத்தக்கது.

 

  • 3

VIDEOS

Recommended