கோயம்பேடு மார்க்கெட்டில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு.
ஆனந்த்
UPDATED: Oct 14, 2024, 7:39:26 AM
சென்னை
கோயம்பேடு மார்க்கெட்டில் மழை நீர் தேக்கத்துக்கு தீர்வு காண ரூபாய் 17 கோடியில் மழை நீர் வடிகால் வாரிய கால்வாய் அமைக்க திட்டமிட்டு திட்டமிட்டுள்ளதாக இந்து அறநிலை துறை அமைச்சர் பி .கே சேகர்பாபு தெரிவித்துள்ளார்
இதுகுறித்து செய்தியாளர் சந்தித்த அவர் கோயம்பேடு மார்க்கெட்டில் மழைக்காலங்களில் மழைநீர் தேங்குவதை நிரந்தரமாக தீர்வு காண ரூபாய் 17 கோடி திட்ட மதிப்பீட்டில் ஒப்பந்தங்கள் நிறைவுற்று வரும் காலங்களில் மழையின் தன்மையை பொறுத்து பணிகள் நடைபெறும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
மழை நீர்
இது குறித்து பல்வேறு இடங்களில் அமைச்சர் ஆய்வு பணிகளை சிஎம்டிஏ அதிகாரிகள் சென்னை மாநகராட்சி அதிகாரியுடன் ஆய்வு செய்தார்
கோயம்பேடு மார்க்கெட்டில் வணிக வளாக அலுவலகத்தை பார்வையிட்டார் மேலும் கோயம்பேடு மார்க்கெட் மெட்ரோ நிலையம் பூவிருந்தவல்லி நெடுஞ்சாலை அருகே உள்ள கால்வாயை ஆய்வு செய்தார்
Latest Chennai District News In Tamil
உடன் விருகம்பாக்கம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பிரபாகர் ராஜா கோயம்பேடு வணிக வளாக தலைவர் பாண்டியன் வியாபாரி சங்க தலைவர் ரவி சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் லோகு ஆகியோர் ஆய்வின் போது உடன் இருந்தனர்
கோயம்பேடு போக்குவரத்து ஆய்வாளர் சுந்தரம் இந்த ஆய்வின்போது உடனிருந்து போக்குவரத்து நெரிசலை சரி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது போக்குவரத்து ஆய்வாளர் சுந்தரத்தை பொதுமக்களும் அரசு அதிகாரிகளும் பாராட்டினர்.