• முகப்பு
  • சென்னை
  • மண்ணடி பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஒரு கோடி பிடித்தனர்.

மண்ணடி பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஒரு கோடி பிடித்தனர்.

நெல்சன் கென்னடி

UPDATED: May 23, 2024, 9:30:57 AM

சென்னை மண்ணடி ஜஹாங்கீர் தெருவில்  பி1 காவல் நிலைய உதவி ஆய்வாளர் நாடிமுத்து தலைமையில் போலீசார் மாலை வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது

இஸ்மாயில் என்ற 30 வயது உள்ள நபர் தனது இருசக்கர வாகனத்தில் 1 கோடி ரூபாய் பணம் எடுத்து வந்துள்ளார் போலீஸ் சோதனையில் சிக்கி உள்ளார்.

விசாரணையில் முன்னுக்குப் பின் முரணாக பேசியுள்ளார் இதனை தொடர்ந்து அவரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்தனர்

மேலும் அவாலா பணமாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை செய்து வந்த நிலையில் வருமான வரி துணை அதிகாரிகளிடம் இஸ்மாயில் மற்றும் 1 கோடி ரூபாய் பணத்தை காவல்துறை ஆய்வாளர் விஜயகாந்த் ஒப்படைத்தனர் இது தொடர்பாக வருமான வரித்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

VIDEOS

Recommended