• முகப்பு
  • சென்னை
  • சென்னை மதுரவாயலில் கஞ்சா விற்பனை செய்த சட்டக்கல்லூரி மாணவர் கைது.

சென்னை மதுரவாயலில் கஞ்சா விற்பனை செய்த சட்டக்கல்லூரி மாணவர் கைது.

S.முருகன்

UPDATED: May 24, 2024, 10:45:54 AM

சென்னை மதுரவாயல் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாக மதுரவாயல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று போலீசார் மதுரவாயல் பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது சந்தேகத்திற்குரிய வகையில் இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபரை மடக்கிய போலீசார் அவரிடம் விசாரணை செய்தனர்.

முன்னுக்குப் பின் முரணாக அவர் பேசியதால் மதுரவாயல் காவல் நிலையத்திற்கு அவரை அழைத்து சென்று விசாரித்தனர்.

மேலும் அவர் வந்த இருசக்கர வாகனத்தை சோதனை செய்த போது அதில் கஞ்சா பொட்டலங்கள் இருந்ததை போலீசார் கண்டு பிடித்தனர்.

போலீசாரின் விசாரணையில் கஞ்சா வைத்திருந்த அந்த வாலிபர் ஆவடியை அடுத்த வீராபுரம், நியூ கண்ணியம்மன் நகர் பகுதியை சேர்ந்த வெங்கட் தேவா(20) என்பது தெரியவந்தது.

இவர் மதுரவாயலில் உள்ள தனியார் பல்கலைக் கழகத்தில் 2 ஆம் ஆண்டு சட்டப் படிப்பு படித்து வரும் மாணவர் என்பதும் தெரியவந்தது.

இவர் மொத்தமாக கஞ்சாவை வாங்கி வந்து கல்லூரி மாணவர்களை குறி வைத்து கஞ்சா விற்பனை செய்து வந்தது தெரியவந்தது‌. 

இதனையடுத்து வெங்கட் தேவாவை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து ஒன்றேகால் கிலோ கஞ்சா மற்றும் இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். 

இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை பூந்தமல்லி நீதிமன்றத்தில் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

 

VIDEOS

Recommended