மாணவர்களுக்கு கவுன்சிலர் கறி விருந்து.

சுந்தர்

UPDATED: May 25, 2024, 7:46:15 AM

சென்னை மாநகராட்சி கோயம்பேடு அருகே நெற்குன்றம் 145 வது வார்டு பகுதியைச் சேர்ந்த 10 வது மற்றும் 12ஆம் வகுப்பு பொதுதேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற அரசு மற்றும் தனியார் பள்ளியைச் சேர்ந்த அனைத்து தரப்பு மாணவர்களுக்கு பதக்கம், விருது, புத்தகப் பை உள்ளிட்டவை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சி 145 வார்டு அதிமுக கவுன்சிலர் சத்தியநாதன் ஏற்ப்பாட்டில் அவர் சொந்த செலவில் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் 200க்கும் மேற்பட்ட 10,12 ஆம் மாணவர்கள் தங்கள் பெற்றோர்களுடன் வந்து கலந்து கொண்டனர்.

இதில் இந்த வார்டில் வசிக்கும் பத்தாம் வகுப்பு , பன்னிரண்டாம் வகுப்பில் முதலிடம் பிடித்த மாணவ மாணவிகளுக்கு கேடகமும் பரிசு பொருட்களும் வழங்கப்பட்டது. மேலும் தேர்வில் வெற்றி பெற்ற அனைவருக்கும் பரிசு பொருட்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

அதனை மாணவர்கள் பெற்றோர்கள் என சுமார் 500 பேருக்கு சிக்கன் பிரியாணி கறி விருந்தினை கவுன்சிலர் அளித்தார்.

குறிப்பாக தனது வார்டில் பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கி கரி விருந்து வைத்த கவுன்சிலரின் செயல் அந்தப் பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியைய் ஏற்படுத்தியுள்ளது.

நிகழ்ச்சியில் பேசிய கவுன்சிலர் சத்தியநாதன் கூறுகையில் :

மாணவர்கள் அனைவரும் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் செல்போனை தேவைக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார். 

தேர்வில் தேர்ச்சி பெறக்கூடிய மாணவ மாணவிகள் அனைவருக்கும் ஆண்டாண்டு இதுப போன்று விழா நடத்தப்பட்டு சிறப்பிக்கப்படும் எனவும் 

பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மேல் படிப்புக்கு தன்னால் முடிந்த உதவியை செய்ய போவதாகவும்

தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் எடுத்து அனைவரும் தேர்ச்சி பெற நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.

பின்னர் மாணவர்கள் அனைவருக்கும் கவுன்சிலர் ஏற்பாட்டில் பிரியாணியுடன் கறி விருந்து வழங்கப்பட்டது.

நடிகர் விஜய் யைய் பார்த்து நான் வழங்கவில்லை அவருக்கு முன்பே இருந்து நான் முதியோர் தினத்தை வருடம் வருடம் கொண்டாடுவதாகவும் அதன் தொடர்ச்சி தான் இது என தெரிவித்தார்.

இதில் மாணவர்கள் மட்டுமின்றி பெற்றோர்களும் பங்கேற்று உணவருந்திவிட்டு சென்றனர்.

 

  • 1

VIDEOS

RELATED NEWS

Recommended