• முகப்பு
  • சென்னை
  • ஆவடியில் 15 பேரை கஞ்சா ஆசாமிகள் வெட்டிய சம்பவம் மறைவதற்குள் போலீஸ்காரரை சரமாரியாக தாக்கிய கஞ்சா போதை வாலிபர்

ஆவடியில் 15 பேரை கஞ்சா ஆசாமிகள் வெட்டிய சம்பவம் மறைவதற்குள் போலீஸ்காரரை சரமாரியாக தாக்கிய கஞ்சா போதை வாலிபர்

சுந்தர்

UPDATED: May 5, 2024, 2:14:18 PM

கடந்த வாரம் ஆவடி சட்டமன்ற தொகுதி திருமுல்லைவாயலில் கஞ்சா போதையில் மூன்று வாலிபர்கள் சாலையில் சென்ற கல்லூரி மாணவர்கள் மாணவிகள் பொதுமக்கள் என பதினைந்துக்கும் மேற்பட்டோரை அறிவாளால் வெட்டிய சம்பவம் மறைவதற்குள் நேற்று கஞ்சா போதையில் வாலிபர் ஒருவர் ஆவடி சட்டம் ஒழுங்கு போலீஸ்காரர் ஒருவரை நடு ரோட்டில் கல்வீசி சரமாரியாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆவடி அருகே தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் கஞ்சா போதையில் வாலிபர் அப்பகுதியில் நடந்து சென்ற பொது மக்களிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதால் அதிர்ச்சி அடைந்து பொதுமக்கள் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்

அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற ஆவடி காவல் நிலைய தலைமை காவலர் சரவணன் மீது கஞ்சா போதை வாலிபர் கல்லை எடுத்து வீசி தாக்கினார் இதனால் அதிர்ச்சி அடைந்த போலீஸ்காரர் சரவணன் அங்கிருந்த கட்டையை எடுத்து கஞ்சா போதை வாலிபரை அடித்து காவல் நிலையம் அழைத்து சென்றார்

பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் அதே பகுதியை சேர்ந்த லோகேஷ் (19) என்பதும், கரையான் சாவடியில் உள்ள பால் நிறுவனர் தயாரிக்கும் நிறுவனத்தில் பால் பேக்கிங் செய்யும் வேலை செய்து வருவதும் தெரியவந்தது

மேலும் இவர் அந்த பகுதியில் அடிக்கடி கஞ்சா போதையில் சாலையில் செல்லும் பொது மக்களிடம் சில்மிஷத்தில் ஈடுபடுவது வழக்கம் எனவும் தெரியவந்தது.

கஞ்சா போதை வாலிபர் லோகேஷ் மற்றும் காவலர் சரவணன் சண்டையிடும் வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், இச்சம்பவம் குறித்து ஆவடி காவல் ஆணையராகம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில்,

கஞ்சா போதையில் வாலிபர் தகராறு செய்வதாக கிடைத்த தகவலின் பெயரில் அங்கு சென்ற காவலர் சரவணன் மீது கஞ்சா போதை வாலிபர் லோகேஷ் கற்களை வீசி தாக்கியதாகவும், கஞ்சா போதையில் இருந்த லோகேஷை கட்டுப்படுத்த குறைந்தபட்ச பலம் பிரயோகிக்கப்பட்டதாகவும், அவர் மீது சிறிய வழக்கு பதிவு செய்து பெற்றோருடன் அனுப்பி வைத்து விட்டதாகவும் விளக்கம் அளித்துள்ளனர்

அரசை பற்றி குறை கூறினால் உடனடியாக பொய் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கும் காவல்துறையினர் நடுரோட்டில் போலீஸ்காரர் மீது கல்வீசி தாக்குதல் நடத்திய கஞ்சா போதை ஆசாமியை விடுவித்தது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

 

  • 5

VIDEOS

Recommended