• முகப்பு
  • சென்னை
  • குழந்தைகள் புற்றுநோய் விழிப்புணர்வுக்கான சைக்கிள் பேரணி.

குழந்தைகள் புற்றுநோய் விழிப்புணர்வுக்கான சைக்கிள் பேரணி.

சுந்தர்

UPDATED: May 5, 2024, 6:59:00 PM

தமிழகத்தில் தற்போது வயது வித்தியாசம் இல்லாமல் புற்றுநோய் பரவி வருகிறது இது குறித்த விழிப்புணர்வு குறைந்து வரும் நிலையில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் குழந்தைகளுக்கான புற்றுநோய் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சைக்கிள் பேரணி குன்றத்தூரில் நடைபெற்றது குன்றத்தூர் பஸ் நிலையத்தில் தொடங்கிய இந்த சைக்கிள் பேரணியில் ஏராளமானார் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சிக்கு முன்னதாக சிலம்பாட்டம், வாலாட்டம், பறை இசை, கரகாட்டம் உள்ளிட்ட பல்வேறு பாரம்பரிய நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது இதனை தொடர்ந்து தொடங்கிய சைக்கிள் பேரணியில் 500க்கும் மேற்பட்டோத் வயது வித்தியாசம் இல்லாமல் அனைவரும் கலந்து கொண்டு குன்றத்தூர் பேருந்து நிலையத்திலிருந்து பொன்னியம்மன் கோயில் தெரு பல்லாவரம் சாலை மேத்தா நகர் வழியாக சுமார் 8 கிலோ மீட்டர் தூரம் பேரணியாக சென்றனர்.

இந்த பேரணியில் சைக்கிள் கொண்டு வருபவர்களுக்கு நுழைவு கட்டணமாக 200 ரூபாயும், சைக்கிள் இல்லாமல் வருபவர்களுக்கு ரூபாய் 300 நுழைவு கட்டணமாக பெறப்பட்டது.

இந்த சைக்கிள் பேரணியில் நுழைவு கட்டணம் ரூபாய் 5 லட்சம் வசூலான நிலையில் இந்த தொகையை அடையாறில் உள்ள புற்றுநோய் மையத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்டது

குழந்தைகளுக்கான புற்றுநோய் விழிப்புணர்வு சைக்கிள் பேரணியில் வயது வித்தியாசம் இன்றி ஏராளமானோர் கடும் வெயிலிலும் ஆர்வமாக கலந்து கொண்டு சென்றது குறிப்பிடத்தக்கது.

 

  • 3

VIDEOS

Recommended