• முகப்பு
  • சென்னை
  • வண்ணாரப்பேட்டையில் வியாபாரிகளை வெட்டி மாமுல் கேட்ட 6 ரவுடிகள் கைது.

வண்ணாரப்பேட்டையில் வியாபாரிகளை வெட்டி மாமுல் கேட்ட 6 ரவுடிகள் கைது.

நெல்சன் கென்னடி

UPDATED: May 15, 2024, 1:00:34 PM

Breaking Chennai news 

சென்னை வண்ணாரப்பேட்டை ஜேபி கோயில் தெருவில் கடந்த திங்கட்கிழமை இரவு நியூ மெட்ரோ ஷூ மார்ட் என்ற செருப்பு கடை மற்றும் உட்லண்ட்ஸ் துரித உணவகம் ஆகிய கடைகளில் உரிமையாளர்களிடம் மாமுல் கேட்டு தர மறுத்ததால் உரிமையாளர் உசேன் மற்றும் ஊழியர் யாசர் அரஃபாத் துரித உணவாக உரிமையாளர் பஷீர் அகமது ஆகியோரை வெட்டிய ஆறு பேர் அங்கிருந்து தப்பி ஓடினர்.

Chennai District News

மேலும் காயமடைந்தவர்களை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்

இந்நிலையில் சிசிடிவி காட்சிகள் தொலைக்காட்சிகளில் வைரலாகியது மேலும் இது தொடர்பாக வியாபாரிகள் சங்கத்தினர் வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் சக்திவேலிடம் புகார் மனுவினை கொடுத்தனர்.

Today Crime News In Chennai 

இதனை தொடர்ந்து போலீசார் விரைந்து நடவடிக்கை எடுத்து நவீன் என்ற பல்லு, சூர்யா என்ற எம்டி சூர்யா, தரணி, ஆனந்த முருகன் என்ற குள்ள ஆனந்த், மதன் என்ற டேமேஜ் மதன், சந்தோஷ் உள்ளிட்ட ஆறு பேரை கைது செய்து பொதுமக்களை அச்சுறுத்துவது வியாபாரிகளை மிரட்டி மாமுல் பறிப்பது வியாபாரிகளை கத்தியால் வெட்டியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

 

VIDEOS

Recommended