• முகப்பு
  • வானிலை
  • தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு பரவலாக மழை பெய்ய வாய்ப்பு.

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு பரவலாக மழை பெய்ய வாய்ப்பு.

கோபிநாத்

UPDATED: Apr 29, 2024, 6:14:31 PM

தமிழகத்தில் நிலவும் அதிகப்படியான வெப்பத்துக்கு மத்தியில் அவ்வப்போது கோடை மழை பெய்து வருவது மக்களுக்கு சற்று ஆறுதலாக அமைத்துள்ளது.

அதன்படி தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அதன்படி, இன்று (ஏப்ரல் 29) முதல் மே 1 வரை குமரி, நெல்லை பகுதிகளில் லேசான மழை பெய்யும்.

மே 2 ஆம் தேதி மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

மேலும் மே 3,4,5 ஆகிய தேதிகளில் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களிலும், வட தமிழக உள் மாவட்டங்களிலும் லேசான மழை பெய்யக்கூடும்.

 

VIDEOS

Recommended