• முகப்பு
  • வானிலை
  • நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 01.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 01.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

இர்ஷாத் ரஹ்மதுல்லா

UPDATED: May 19, 2024, 3:35:19 AM

Sri Lanka weather forecast 

இலங்கை மற்றும் அதனைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பருவமழைக்கு முந்தைய காலநிலை காரணமாக, அடுத்த சில நாட்களில் நிலவும் மழை மற்றும் காற்றின் நிலை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக கால நிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. 

தீவின் பெரும்பாலான பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் மன்னார் மாவட்டத்திலும் அவ்வப் போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

 நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 01.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

 மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.

 Live Rain News Today 

தென் மாகாணத்தில் அவ்வப்போது (30-40) kmph வரை ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் கால நிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. 

 இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

 

 

VIDEOS

Recommended