• முகப்பு
  • வானிலை
  • தென் மாகாணத்தில் சில இடங்களில் மி.மீ. 100க்கு மேல் கனமழை பெய்ய வாய்ப்பு

தென் மாகாணத்தில் சில இடங்களில் மி.மீ. 100க்கு மேல் கனமழை பெய்ய வாய்ப்பு

இர்ஷாத் றஹ்மத்துல்லா

UPDATED: Oct 21, 2024, 3:10:34 AM

மேல், சப்ரகமுவ, தெற்கு, வடமேற்கு மற்றும் வடக்கு மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் இன்று (21) அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தென் மாகாணத்தில் சில இடங்களில் மி.மீ. 100க்கு மேல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

original/1729446169781
நாட்டின் ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளைகளில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களைக் கோருகிறது.

original/1729238822571

VIDEOS

Recommended