தமிழகத்தில்14 இடங்களில் 100 டிகிரிக்கு மேல் ஃபாரன்ஹீட்

Admin

UPDATED: Apr 26, 2024, 3:00:27 PM

தமிழகத்தில்14 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் சுட்டெரித்தது என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

திருப்பத்தூர், சேலத்தில் தலா 107 டிகிரி; தருமபுரி, கரூர் பரமத்தியில் தலா 106 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் தகித்தது. 

திருத்தணியில் 105, வேலூர், திருச்சி, நாமக்கல்லில் தலா 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் சுட்டெரித்தது. 

மதுரை விமான நிலையம், கோவை, மதுரை நகரம், தஞ்சையில் தலா 102 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவு. பாளையங்கோட்டையில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

VIDEOS

Recommended