• முகப்பு
  • இலங்கை
  • வாழைச்சேனை கார்த்திகை தீப நாள் கலைவாணி கலைமன்றத்தினால் ஏற்ப்பாடு

வாழைச்சேனை கார்த்திகை தீப நாள் கலைவாணி கலைமன்றத்தினால் ஏற்ப்பாடு

எஸ்.எம்.ஏம்.முர்ஷித்

UPDATED: Dec 14, 2024, 3:45:47 PM

இன்று (சனிக்கிழமை) கார்த்திகை தீப நாளை முன்னீட்டு வருடாவருடம் கலைவாணி கலைமன்றத்தினால் ஒழுங்கு செய்யப்படுகின்ற இறந்தவர்களின் சமாதியில் விளக்கேற்றும் நிகழ்வு நடை பெறுவது வழக்கம்.

original/dofoto_20241214_205109736_copy_819x655
2024 ம் ஆண்டின் கார்த்திக தீபம் ஏற்றும் நிகழ்வு வாழைச்சேனை கலை வாணி கலைமன்ற தலைவர் சு.டிலக்சன் தலைமையில் வாழைச்சேனை இந்து மையானத்தில் நடைபெற்றது. 

இந் நிகழ்வில் நூற்றுகனக்கான மக்கள் பங்கேற்றதுடன் கல்லறையில் உறங்கிகொண்டிருக்கும் ஆத்மாக்களுக்கு அவர்களின் உறவினர்கள் விளக்கேற்றி அஞ்சலி செலுத்தினர்.

இந்நிகழ்வில் கலைவானி கலைமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றதுடன் மக்கள்அஞ்சலி செலுத்துவதற்கான எண்னை ஊற்றிய விளக்குகள் அனைத்தும் இலவசமாக வழங்கப்பட்டது.

 

VIDEOS

Recommended