இப்படியும் நடக்கின்றதா இது வெளிவந்தது வவுனியாவில்..
வவுனியா
UPDATED: Jun 2, 2024, 3:57:20 AM
வவுனியாவில் உள்ள முச்சக்கர வண்டிகளுக்காக ஸ்டிக்கர் ஒட்டுவதற்காக முச்சக்கரவண்டியுடன் உரிமையாளர்கள் நேற்று காலை பொலிஸ் மைதானத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
அவ்வாறு அழைக்கப்பட்ட முற்சக்கர வண்டிகளில் யுக்திய மற்றும் பொலிஸ் அவசர இலக்கங்கள் முற்சக்கரவண்டிகளில் பதிவிறக்கம்.
இதற்காக முச்சக்கர வண்டிகளின் முழுமையான விபரம், சாரதிகள் மற்றும் உரிமையாளர்களின் விபரங்கள் விண்ணப்ப படிவம் ஒன்றில் பெறப்பட்டதன் பின்னர் ஒவ்வொரு முச்சக்கர வண்டி உரிமையாளர்களிடம் இருந்தும் 400 ரூபாய் வீதம் வவுனியா பொலீசார் அறவிட்டதன் பின்னர் அவர்களுடைய முச்சக்கர வண்டிகளில் மஞ்சல் வர்ண பூச்சினாள் பதாகை ஒன்று காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
வவுனியாவில் பதிவில் உள்ள முச்சக்கர வண்டிகள் மற்றும் தனியார் பயன்படுத்தும் முச்சக்கர வண்டிகள் அனைத்தும் இந்த செயற்பாட்டுக்காக பொலீஸ் மைதானத்திற்கு அழைக்கப்பட்டு இருந்ததோடு அனைத்து முற்சக்கர வண்டிகளிலும் 400 ரூபாய் வீதம் பெறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை வவுனியாவில் சுமார் 3000 முச்சக்கர வண்டிகள் பாவனையில் உள்ளதாக முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் தெரிவித்திருந்தனர் இதன் மூலமாக பெறப்பட்ட லட்சக்கணக்கான நிதி எதற்காக பயன்படுத்தப்படும் என்பது தொடர்பிலும் அவர்களுக்கு கேள்வி எழுப்பியிருந்தனர்.