• முகப்பு
  • இலங்கை
  • இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவானது நீண்ட காலம் தொடர்பு கொண்டது

இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவானது நீண்ட காலம் தொடர்பு கொண்டது

இர்ஷாத் ரஹ்மதுல்லா

UPDATED: May 16, 2024, 11:49:35 AM

Sri Lanka News 

இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவானது நீண்ட  காலம் தொடர்பு கொண்டது. கல்வி ஏனைய துறைகளில் பாகிஸ்தான் இலங்கைக்கு பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது.original/img_8117
இந்த நிலையில் உயர் கல்வியை மேற்கொள்ளுகின்ற மாணவர்களுக்கான சந்தர்ப்பத்தை அல்லாமா முஹம்மது இக்பால் புலமை பரிசில் நிதியத்தின் மூலம் இலங்கையர்களுக்கு பாகிஸ்தான் வழங்கி வருகிறது.

Breaking Sri Lanka News 

இவருடத்துக்கான இந்த நிகழ்வு இன்று கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச ஞா பகார்த்த மண்டபத்தில் இடம்பெற்றது.

original/img_8125

 நாட்டின் நாலா பாகங்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற மாணவர்கள் இன்று வருகை தந்திருந்தனர்.

original/img_8106
அது போன்று இரண்டாவது அமர்வு இன்று மாலை இடம் பெற்ற போது அதில் இலங்கைக்கான பாகிஸ்தானின் உயர் ஸ்தானிகர் ஓய்வு பெற்ற மேஜர் ஜென்ரல் பஹீம் அல் அசிஸ் கலந்து கொண்டு சிறப்பு. உரையினை ஆற்றினார்.

 பாகிஸ்தான் இலங்கைக்கு 5 பிரிவுகளாக உதவிகளை வழங்கி வருவதாக இதன் போது தெரிவிக்கப்பட்டது.

original/img_8123
கல்வி கலாச்சார சமூக பொருளாதார இன நல்லிணக்கம் போன்ற பிரிவுகளிலேயே இந்த உதவி திட்டங்கள் வழங்கப்பட்டு வருவதாகவும். அல்லாமா இக்பால் புலமைப் பரிசில் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது முதல் இலங்கை மாணவர்களுக்கு அதிகமான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாகவும் இதன் போது தெரிவிக்கப்பட்டது.

 இன்றைய இந்த நிகழ்வில் பாகிஸ்தான் பிரதிநிதித்துவப்படுத்தும் பல்வேறு உயர்கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள், இலங்கையின் முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

பாகிஸ்தானின் பல்கலைக்கழகத்தின் செயல்பாடுகள் மாணவர்கள் உள்ளீர்ப்பு போன்ற விடயங்கள் தொடர்பில் விளக்கமளித்தனர்.

 

VIDEOS

Recommended