• முகப்பு
  • இலங்கை
  • தற்போதைய நிலைமைகளை மட்டக்களப்பு அரசாங்க அதிபரின் கவனத்துக்கு கொண்டுசென்றார் எம். எஸ். எம். சுபைர்

தற்போதைய நிலைமைகளை மட்டக்களப்பு அரசாங்க அதிபரின் கவனத்துக்கு கொண்டுசென்றார் எம். எஸ். எம். சுபைர்

இர்ஷாத் ரஹ்மத்துல்லா

UPDATED: Nov 27, 2024, 5:34:50 AM

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாகப் பெய்துவரும் அடை மழை காரணமாக தாழ்நில பிரதேசங்கள், வீதிகள் மற்றும் வீடுகள் நீரில் மூழ்கிக் காணப்படுவதுடன், மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம். எஸ். எம். சுபைர் மட்டு  அரச அதிபரின் கவனத்திற்கு  கொண்டுவந்துள்ளார்.

குறிப்பாக ஏறாவூர் பிரதேசத்தின் சில பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளதுடன் அங்குள்ள மக்கள் இடம்பெயர்ந்து செல்ல வேண்டியதொரு துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இந்த மக்களின் நலன் மற்றும் பாதுகாப்பு கருதி நேற்று (26) காலை ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.ஜே.முரளிதரன் ஆகியோருடன் தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு தற்போதைய நிலைமைகள் தொடர்பாக எடுத்துக் கூறியதுடன் பாதிக்கப்பட்ட மக்களின் நலன் கருதி விரைவாக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டதாக . எஸ். எம். சுபைர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 

VIDEOS

Recommended