பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான சர்வதேச தினம்
இர்ஷாத் ரஹ்மத்துல்லா
UPDATED: Nov 27, 2024, 4:55:21 AM
சர்வதேச மனித உரிமைகள் உலகளாவிய பணி ஏற்பாடு செய்திருந்த பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு கொழும்பு BMICH லாவெண்டர் மண்டபத்தில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ALSO READ | கண்டி- மாத்தளை பிரதான வீதியில் மீண்டும் வௌ்ளம்
இந்த மாநாட்டில் விசேட அதிதியாக அமெரிக்கப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் திரு மற்றும் திருமதி மது கிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
2024 ஆம் ஆண்டுக்கான தேசத்தின் நாயகன் மற்றும் தேசத்தின் பெண்கள் விருது சமூகப் பணியாளர்களை கௌரவிப்பதற்கும் மதிப்பீடு செய்ததற்கும் வழங்கப்பட்டது.
அமெரிக்கப் பல்கலைக்கழகம், சமூக சேவை ஆர்வலர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட குழுவிற்கு மனித சிறப்பு தங்க விருதை சிறப்பு விருதாக வழங்கியது.
மேலும், 30 அழகுக் அழகு கலை நிபுணர்களுக்கு சர்வதேச அழகுப் போட்டியில் பங்கேற்க இலவச அனுமதி வழங்கி வைக்கப்பட்டது.
எழுத்தாளர்கள்,
பத்திரிகையாளர்கள்,
திரைப்பட இயக்குனர்கள்,
அழகுக்கலை நிபுணர்கள்,
தொழில் வல்லுநர்கள்
சமூக சேவகர்கள், அறிவிப்பாளர்கள்,
கலைஞர்கள் போன்ற பல்வேறு நபர்களுக்கு பாராட்டு விருதுகள் வழங்கப்பட்டன.
மேலும், தேர்வு செய்யப்பட்ட 80 பாடசாலை மாணவ மாணவிகளுக்கு இலவச பாடசாலை பைகள் வழங்கப்பட்டன.
சர்வதேச மனித உரிமைகள் உலகளாவிய பணியின் புதிய உறுப்பினர்களுக்கு பிரதம அதிதியின் மூலம் சான்றிதழ்கள் மற்றும் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.
சர்வதேச மனித உரிமைகள் குளோபல் மிஷன் chairman மஹூம், தலைவர் அமீர்கான், பனிப்பாளர் மற்றும் ஜெனரல் அட்மினிஸ்ட்ரேஷன் குபேர லிங்கம், குழந்தைகள் மற்றும் பெண்கள் விவகாரங்களுக்கான துணைத் தலைவி ஷரீனா ஃபரீன், ஆலோசகர் நசீம், பணிப்பாளர் அப்துல் ரசாக் மற்றும் செய்தி இயக்குநர் அஜந்த ரணசிங்க, ஊடகப் பணிப்பாளர், ஊடகவியலாளர் பஸ்லான் பணிப்பாளர் மௌபித் உட்பட பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.