ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸ் 15 வது வருடாந்த மாநாடு
எம். கே. எம். நியார்
UPDATED: Nov 27, 2024, 2:11:14 AM
பதுளை நகரிலுள்ள இலங்கை ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸின் பதினைந்தாவது வருடாந்த மாநாடு அதன் முன்னால் தலைவர் எம்.ஜே.எம்.மஹ்தி ஹஸன் அவர்களின் தலைமையில் பதுளை வை.எம்.எம்.ஏ.மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் சிறப்பு அதிதியாக சுகாதார அமைச்சின் பயிற்சி மற்றும் ஆராய்ச்சிப் பிரிவு வைத்தியர் ஜனாப் ரியாஸ் ஷரீப் அவர்கள் கலந்து கொண்டார்.ம
ஜ்லிஸின் முன்னால் தலைவர் தமது தலைமையுரையில் இந்த மஜ்லிஸானது ஆரம்பத்தில் எட்டு உறுப்பினர்களுடன் ஆரம்பமானதென்றும், தற்போது மண்டபம் நிறைய நூற்றுக்கணக்கான மாணவர்களை காணும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும்,மஜ்லிஸ் மாணவர்களின் தியாகத்தால் கல்வி, கலாசார, மற்றும் ரமழான் மாத நிகழ்வுகளை சிறப்பாக நடத்த முடிந்ததாகவும் கூறினார்.
ALSO READ | இன்றைய நல்ல நேரம் 27-11-202
இதன் போது ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய செயலாளர் திரு. பி.எம்.சி.ஆர் பஸ்நாயக்காவுக்கு நினைவுச் சின்னம் வழங்கி வைக்கப்பட்டது.