ஓட்டமாவடி பிரதேசத்தில் வெள்ள ஆபாயத்தைத் தடுக்க துரித நடவடிக்கை
எஸ்.எம்.எம்.முர்ஷித்
UPDATED: Nov 26, 2024, 3:17:17 PM
கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்ட மழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ள அபாயத்தை தடுக்கும் நோக்கில் ஓட்டமாவடி பிரதேச செயலக பிரிவிலுள்ள வடிகான்களை துப்பரவு செய்யும் பணிகள் இடம்பெற்று வருகின்றது.
கோறளைப்பற்று மேற்கு - ஓட்டமாவடி பிரதேச செயலாளர் ஏ.தாஹிரின் வழிகாட்டலில் ஓட்டமாவடி பிரதேச சபையின் செயலாளர் எஸ்.எம்.சஹாப்தீனின் பங்களிப்புடன் பிரதேச சபையின் கனரக வாகனங்களூடாக இச்செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
ALSO READ | புயலுக்கு "ஃபெங்கல்" என பெயரிடப்பட்டுள்ளது.
நீர் வடிந்தோட முடியாமல் குப்பை, கூழங்கள், மணல் நிரம்பிக் காணப்படும் வடிகான்கள் சீர்செய்யப்பட்டு சீரான நீரோட்டம் இடம்பெறவும் குடியிருப்புக்களுக்குள் வெள்ளநீர் உட்புகுந்து பொதுமக்களுக்கு ஏற்படும் அசெளகரியங்களைத் தடுக்கும் வகையிலும் இச்செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதில் பிரதேச செயலாளர் ஏ.தாஹிர் ஓட்டமாவடி பிரதேச சபை செயலாளர் எஸ்.எம்.சஹாப்தீன் , பிரதேச செயலக பிரதித்திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.ஏ.றியாஸ், பிரதேச செயலக, பிரதேச சபை உத்தியோகத்தர், ஊழியர்கள் ஆகியோர் களத்தில் நின்று செயலாற்றி வருகின்றனர்.