உலகை வென்றவர்கள் வாசித்த மக்களே' -ஓட்டமாவடி மத்திய கல்லூரியில்
எஸ்.எம்.எம்.முர்ஷித்
UPDATED: Nov 25, 2024, 10:01:28 AM
ஓட்டமாவடி மத்திய கல்லூரியில் 2024 இற்கான தேசிய வாசிப்பு மாத இறுதி நாள் நிகழ்வு 'உலகை வென்றவர்கள் வாசித்த மக்களே' எனும் தொனிப்பொருளில் இன்று பாடசாலையின் கேட்போர் கூடத்தில் கல்லூரியின் அதிபர் எம்.ஏ.ஹலீம் இஸ்ஹாக் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட உதவி நூலகர் எம்.என். ரவிகுமார் கலந்து கொண்டதுடன் கௌரவ அதிதியாக கோறளைப்பற்று மேற்கு கோட்டக்கல்வி அதிகாரி ஏ.எம். தாஹிர் கலந்து கொண்டார்.
இந் நிகழ்வில் கலந்து கொண்ட கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட உதவி நூலகர் எம்.என். ரவிகுமரின் புதல்வி செல்வி ஷயானா ரவிக்குமார் எழுதிய 'ஏ கெனைன் ஜேர்னி ஃபிரோம் ஸ்டிரே டூ ஃபேமிலி' “A Canine Journey From to Family” ' என்ற ஆங்கில கதையின் பிரதிகளை பாடசாலை நூலகத்திற்கு அன்பளிப்பு செய்தார்.
பாடசாலை நூலகக் குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வினை முன்னிட்டு ஒக்டோபர் மாதம் முழுவதும் மாணவர்களுக்கான பல்வேறு போட்டி நிகழ்ச்சிகள் நடாத்தப்பட்டதோடு வீதி நாடகமும் ஏற்பாடு செய்யப்பட்டு சிறப்பாக மேற்கொள்ளப்பட்டிருந்தது.