550 சிங்கள, தமிழ் ,முஸ்லிம் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு
அஷ்ரப்.ஏ. சமத்
UPDATED: Nov 24, 2024, 6:14:27 AM
கல்கமுவ பிரதேச செயலாளர் பிரசன்ன ஹேரத்தின் வழிகாட்டலில் வறுமைக் கோட்டின் கீழ் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு பிரதேச செயலக நலன்புரி சங்கத்தின் லொத்தர் சீட்டு விற்பனையின் மூலம் கிடைத்த நிதியைக் கொண்டு 12 லட்சம் ரூபா செலவில் கல்கமுவ பிரதேச செயலக பிரிவிலுள்ள 550 சிங்கள, தமிழ் ,முஸ்லிம் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் பகிர்ந்தளிக்கும் நிகழ்வு பிரதேச செயலக வளவில் இடம்பெற்றது.
அத்துடன் பாடசாலை மாணவர்களுக்கு மா மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டன. வத்துப்பிட்டிவல ஏ.டி.ஜி முதலீட்டு வலயத்தின் அனுசரனையுடன் மாணவர்களுக்கு விசேட கருத்துரைகளும்; வழங்கப்பட்டன. பேராதனை கல்வியற் பீட சிரேஷ்ட விரிவுரையாளர் சவணதிலக்க கஜதீரவின் விரிவுரை நிகழ்த்தப்பட்டது. கலந்து கொண்ட சகல மாணவர்கள்களுக்கு பகல் போசனமும் வழங்கப்பட்டது.
இந் நிகழ்வில் கேகாலை மாவட்ட அரசாங்க அதிபர் ரஞ்சன் ஜயசிங்க மேலதிக மாவட்ட செயலாளர் திலிப் நிஷாந்த உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
A