போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து பிரதி அமைச்சர்கள்
மொஹமட் நசார் - கொழும்பு
UPDATED: Nov 22, 2024, 2:31:29 PM
பொறியியலாளர் ஜனித ருவன் கொடித்துவக்கு துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து பிரதி அமைச்சராகவும், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சராக கலாநிதி பிரசன்ன குமார குணசேன அவர்கள் தமது கடமைகளை ஆரம்பித்தனர்.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் பிமல் ரத்நாயக்க மற்றும் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில சி.கே. பெரேரா மற்றும் அமைச்சு தொடர்பான நிறுவனங்களின் தலைவர்கள், பணிப்பாளர் நாயகங்கள், முகாமைத்துவப் பணிப்பாளர்கள் உட்பட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
இதன் போது உரையாற்றிய அமைச்சர் பிமல் ரத்நாயக்க -
இளம் மற்றும் புதிய பிரதியமைச்சர்களாக இருந்தாலும் இருவரும் கல்வி, திறமை மற்றும் ஆற்றல் மிக்கவர்கள் என தெரிவித்தார்.
மேலும், தனது ஆதரவையும், வழிகாட்டுதலையும், ஆசிர்வாதத்தையும் முழுமையாக
வழங்குவதாகவும், அனைத்து பணிக்குழுக்களும் ஒன்றிணைந்து செல்ல வேண்டும் என்றும் அவர் கூறினார்.
நாம் ஒன்றிணைந்து தொடர்ச்சியாக செயற்பட்டால் இந்த அமைச்சின் சிக்கலான மற்றும் முக்கியமான அனைத்து விடயங்களையும் உச்ச மட்டத்திற்கு கொண்டு வர முடியும் எனவும் பிரதி அமைச்சர்கள் கருத்து தெரிவித்தனர்.