• முகப்பு
  • இலங்கை
  • அட்டாளைச்சேனை பிரதேச செயலாளரே இது உங்களின் கவனத்துக்கு 

அட்டாளைச்சேனை பிரதேச செயலாளரே இது உங்களின் கவனத்துக்கு 

அஹமத் ஜெமீல் - கிழக்கு செய்தியாளர்

UPDATED: Nov 27, 2024, 2:19:30 AM

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள இயற்கை அனைத்துத்தின் காரணமாக அம்பாறை மாவட்டத்தின் அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்துக்குட்பட்ட அட்டாளச்சேனை (9)ஒன்பதாம் பிரிவின் புறத்தோட்ட பகுதியில் வாழும் மக்கள் வசிக்கும் வீடுகளுக்குள் நீர் புகுந்து அம்மக்கள் நிர்க்கதியாகி உள்ளார்கள்

இந்த நிலையில் இன்று அட்டாளைச் சேனை பிரதேச செயலகத்தினால் பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்களை பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் கட்டிடத்தில் தங்குவதற்கு வருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது அகோரிக்கைக்கு அமைய அப்பகுதியில் பாதிக்கப்பட்ட மக்கள் பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் கட்டிடத்திற்கு சென்று தங்களது பெயர்களையும் பதிவு செய்து கொண்டனர்.

அப்போது மக்களுக்கு இரவு நேர உணவு வழங்கப்படும் என கிராம சேவகர் கூறினார் அதன்படி மக்கள் கட்டிடத்தில் தங்குவதற்கு ஆயத்தமாக வந்த நிலையில் சுகாதார வைத்திய பரிசோதகர்கள் அங்கு வந்து மக்கள் தங்குவதற்குரிய நிலைமைகளை ஆராய்ந்த போது மக்கள் தங்குவதற்குரிய போதியளவு சுகாதார வசதிகள் இல்லாததால் மக்கள் இங்கு தங்க முடியாது என கூறினார்கள்.

இதனை அடுத்து இரவு 8 மணியளவில் அங்கு வந்த கிராம சேவகர் மக்களை அங்கிருந்து வெளியேறி வேறு இடத்துக்கு அதாவது தொலைவிலுள்ள அறபா பாடசாலை கட்டிடத்தில் சென்று தங்குமாறு மக்களை கேட்டுக்கொண்டார் அத்தோடு பாடசாலையில் தங்குபவர்களுக்கு மட்டுமே சமைத்த உணவும் வழங்கப்படும் என்றும் கூறினார் 

கிராம சேவகரின் கதையை கேட்ட மக்கள் 9ம் பிரிவில் இருந்து அறபா பாடசாலைக்கு செல்ல முடியாது என அதிகமானவர்கள் மறுப்பு தெரிவித்ததோடு இதற்கு பிறகு சாப்பாடு சமைக்கவோ கடைகளில் எடுக்கவோ முடியாது ஆகவே இரவு நேர சாப்பாடு தரவேண்டும் என கிராம சேவகரிடம் மக்கள் கேட்ட போது பாடசாலையில் தங்குபவர்களுக்கு மட்டுமே சாப்பாடு தர முடியும் இது தான் பிரதேச செயலகத்தின் உத்தரவு என்று கூறிய பின் மக்கள் செய்வது அறியாது வீட்டில் எப்படியாவது வாழ்வோம் என்று முணுமுணுப்புடன் சென்றனர் 

இந்த விஷயத்தில் மக்கள் நியாயமான பல கேள்விகளையும் கேட்டனர் அதாவது 

1) மக்களுக்கு தங்க போதியளவு வசதிகள் இல்லாத பலநோக்கு கூட்டுறவு கட்டிடத்தை ஏன் பிரதேச செயலகம் தெரிவு செய்தது  

2) இரவு 8 வரை மக்களை தங்கவைத்து விட்டு தூர இடத்தில் உள்ள பாடலையில் தங்க மறுத்த மக்களுக்கு இரவு உணவை கொடுத்து அனுப்ப முடியாமல் போனது ஏன்?

இந்த சம்பவம் என்பது மரத்தால் விழுந்தவனை மாடு வெட்டிய கதை போன்று இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை பிரதேச செயலகமும் அலக்கழைய வைத்து விட்டது.

ஆகவே இது போன்ற சம்பவம் இனிமேலும் நடைபெறாமல் இருப்பதற்கு பிரதேச செயலாளர் கவனம் செலுத்த வேண்டும்.

 

VIDEOS

Recommended