• முகப்பு
  • இலங்கை
  • மன்னார் வங்காளயில் 50 குடும்பங்கள் இடம் பெயர்ந்து தற்காலிக முகாமில் தங்க வைப்பு

மன்னார் வங்காளயில் 50 குடும்பங்கள் இடம் பெயர்ந்து தற்காலிக முகாமில் தங்க வைப்பு

இர்ஷாத் ரஹ்மத்துல்லா

UPDATED: Nov 27, 2024, 6:14:24 AM

தற்போது ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம் காரணமாக மன்னார் வங்காளப் பிரதேசத்தில் 50 குடும்பங்களை சேர்ந்த 200 பேர் இடம்பெயர்வுக்குள்ளாக இருப்பதாக ஆர் எஃப் ஓ மீனவர் கிராமிய அமைப்பின் பொருளாளர் பிராங்கோ சோசை தெரிவித்தார்.

 வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாள முகத்தை அடுத்து மன்னார் குடா பிரதேசத்தில் கடும் மழை பெய்து வருவதாகவும் இதனை அடுத்து பல்வேறு கிராமங்கள் நீரில் மூழ்கி இருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு பாதிப்புக்குள்ளான மக்கள் வங்காளை ஆனால் ஆரம்ப பாடசாலையில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.

 இவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்குமாறு உரிய அரச அதிகாரிகளிடத்தில் கோரிக்கைகளை முன் வைத்திருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அதே வேளை இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள மோசமான காலநிலை காரணமாக ஏற்படக்கூடிய அனர்த்த நிலைமைகளை அறிவிப்பதற்கும் ஒருங்கிணைப்பதற்கும் 24 மணிநேர தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இதன்படி, 0112 027 148, 0112 472 757, 0112 430 912 மற்றும் 0112 013 051 ஆகிய தொலைபேசி இலக்கங்களின் ஊடாக தகவல்களை அறிவிக்க முடியும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

[email protected] என்ற மின்னஞ்சல் மூலமும் அந்த மையங்களைத் தொடர்புகொள்ள முடியும்.பொலிஸ் தலைமையகத்தில் இந்த விசேட நடவடிக்கை மையம் நிறுவப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதே வேளை தற்பொழுது ஏற்பட்டுள்ள தாழமுக்கம் இலங்கையின் திருகோணமலை கடல் எல்லையில் இருந்து 100 கடல்மைல் தூரத்தில் மையம் கொண்டிருப்பதாகவும் இந்த சந்தர்ப்பத்திலும் அது சூறாவளியாக பரிமாற்றம் செய்யப்படலாம் எனவும் மக்கள் அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அவசர எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

 

VIDEOS

Recommended