மிளிந்த மொர கொடைவினால் சிங்கள மொழியில் எழுதப்பட்ட கட்டுரைகளின் தமிழாக்கமான மலரும் யுகத்திற்கு நூல் வெளியீடு
இர்ஷாத் ரஹ்மதுல்லா
UPDATED: Jun 1, 2024, 7:22:43 PM
முன்னாள் நீதி அமைச்சரும், இந்தியாவுக்கான இலங்கை தூதுவருமான மிளிந்த மொர கொடைவினால் சிங்கள மொழியில் எழுதப்பட்ட கட்டுரைகளின் தமிழாக்கமான மலரும் யுகத்திற்கு நேற்றைய தினம் கொழும்பு பம்பல பெட்டி கதிரேசன் மண்டபத்தில் வெளி யிட்டு வைக்கப்பட்டது.
சர்வ மத தலைவர்களின் பங்களிப்புடன் இந்தவெளியீட்டு நிகழ்வு இடம்பெற்றது.
இந்த வெளியீட்டு நிகழ்வில் வரவேற்பு நடனத்தை திவ்ய சுதன் வழங்கினார். அதனை அடுத்து விடும் பெற்ற வரவேற்புரையினை பார்த்து பைண்டர் நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் க.பாலசுந்தரம் நிகழ்த்தினார்.
பிரதம உரையினை கொழும்பு தமிழ்ச் சங்கத் தலைவர் Dr.k. ரகுபரன் வழங்க, சுவாமி விவேகானந்தா கலாச்சார நிலையத்தின் மாணவர்களது நடனம் இடம் பெற்றது.
இந்த நூலின் மொழியாக்கத்தை செய்த திருமதி.வயலட் அவர்களுக்கு விழுந்த மொரகொடைவின் பா ரியாரான ஜெனிபர் மொரகொடவினால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.
முன்னாள் பிரதம நீதிபதி k. ஸ்ரீபவன், சுவாமி விவேகானந்தா கலாச்சார மையத்தின் தலைவர். பேராசிரியர் அன்குரன் டுட்டா, கொழும்பு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பொருளியல் விரிவுரையாளர் Dr. M. கணேச மூர்த்தி,சட்ட கற்கைகள் மற்றும் சமூக விஞ்ஞான துறை சிரேஷ்ட விரிவுரையாளர் Dr. யசோதரா கதிர்காம தம்பி ஆகியோர் இங்கு சிறப்பு உரையாற்றினர்.
நூலாசிரியர் மிளிந்த மொரகொடவினால் முதற் பிரதி மற்றும் வருகை தந்த அனைத்து அதிதிகள் துறை சார்ந்தவர்களுக்கு நூல்கள் வழங்கி வைக்கப்பட்டன.