பெண் ஒருவரை தோட்ட முகாமையாளர் தாக்கியமை மனித உரிமை மீறும் செயலாகும் - லட்சுமணன் சஞ்சய்
ராமு தனராஜா
UPDATED: May 10, 2024, 8:27:20 AM
இரத்தினபுரி பகுதியில் தோட்டத்தில் வேலை செய்த பெண் ஒருவரை தோட்ட முகாமையாளர் தாக்கி உள்ளார் இது ஒரு மனித உரிமை மீறும் செயலாகும் தோட்ட தொழிலாளர்கள் அவர்களின் உரிமையை கேட்கின்றார்கள்.
என பசறை ஐக்கிய மக்கள் சக்தியின் அமைப்பாளர் லட்சுமணன் சஞ்சய் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இங்கு வீர வசனம் பேசியவர்கள் தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்தை கூட பெற்று கொடுக்கவில்லை.
அதுமட்டுமின்றி அடையாளத்தையும் அழிப்பதற்கான ஒரு கோட்பாடு நடக்கின்றது. அதனால் இந்த வீர வசனம் பேசுபவர்கள் அதற்கான வேலைகளை செய்ய வேண்டும்.
நாம் எதிர்கட்சி என்ற வகையில் இந்த விடயத்தில் எம்மால் முடிந்த வரையில் இப்பிரச்சினைக்கு பங்களிப்பை வழங்குவோம். அதே போல இவ்வாறான செயல்கள் இன்னொரு முறை நடக்காமல் இருக்க எதிர்கட்சி என்ற வகையில் எமது தலைவரின் கவனத்திற்கு கொண்டு சென்று எம்மால் முடிந்த நடவடிக்கைகளை எடுப்போம்.
அரசாங்கத்தில் உள்ள அமைச்சரும் சரி அரசாங்கத்தில் உள்ள பங்காளிகளும் சரி குறித்த பிரச்சினை தொடர்பாக பார்க்க வேண்டும். எல்லா பிரச்சினைகளையும் ஜனாதிபதியிடம் கூறினீர்கள் குறித்த பிரச்சினை தொடர்பிலும் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்று குறித்த பெண்ணை தாக்கிய முகாமையாளரை சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனையை பெற்று கொடுக்க வேண்டும் என அவர் மேலும் கூறினார்.