பல்நோக்கு அபிவிருத்தி உதவியாளர்கள் 50 பேருக்கு நியமனம் வழங்கும் வைபவம் கண்டியில் இடம் பெற்றது
ஜே.எம். ஹாபீஸ்
UPDATED: May 20, 2024, 12:45:47 PM
மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகே தலைமையில் கண்டியிலுள்ள ஆளுநர் காரியாலயத்தில் இடம் பெற்றது.
மூன்று கட்டங்களில் இதுவரை 1760 பேர் பல்நோக்கு அபிவிருத்தி உதவியாளர்களாக மத்திய மாகாணத்தில் நியமனம் பெற்றுள்ளனர். அவர்களின் ஒரு பகதியாகவே மேற்படி 50 பேருக்கான நியமனம் வழங்கப்பட்டது.
இங்கு உரையாற்றிய பிரதம அதிதியான மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகே தெரிவித்ததாவது-
அதிகமானவர்கள் தாம் பொதுமக்கள் சேவை ஒன்றுக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளோம் என்பதை மறந்து, தமது சலுகைகளை உயர்திக்கொள்ளவே முற்படுகின்றனர். தமது உரிமைகளுக்கு போராடுவது மட்டுமன்றி நாட்டின் நலன் பற்றியும் சற்று சிந்திக்க வேண்டும்.
நாட்டு மக்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அரசுக்கு வரி செலுத்துகின்றனர். அவர்களது மேற்படி வரி மூலமே இச் சேவைகள் அமுல் படுத்தப்படுகின்றன, எனவே நாட்டுமக்களின் நலன் பற்றி சற்று சுந்திப்பது கட்டாயமாகும் என்றார்.
இவ்வைபவத்தில் மாகாண பிரதான செயலாளர் அஜித் பிரேமவன்ச, ஆளுநர் செயலாளர் மஜ்சுலா மடஹபொல, மாகாண விவசாய திணைக்கள செயலாளர் சந்தன விக்கரமசூரிய, மாகாண அரச சேவை ஆணைக்குழு செயலாளர் குமுதினி பிரேமச்சந்திர ஆகியோரும் கலந்து கொண்டனர்.