• முகப்பு
  • இலங்கை
  • ஓய்வுபெற்ற இராணுவ வீரர்கள் ஆகியோரின் நலன் மற்றும் நிர்வாக பணிகள் குறித்து ஆராயும் 6வது நிகழ்வு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் தலைமையில்

ஓய்வுபெற்ற இராணுவ வீரர்கள் ஆகியோரின் நலன் மற்றும் நிர்வாக பணிகள் குறித்து ஆராயும் 6வது நிகழ்வு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் தலைமையில்

Irshad Rahumathulla

UPDATED: Jun 9, 2024, 8:21:47 AM

நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த இராணுவ வீரர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் ஓய்வுபெற்ற இராணுவ வீரர்கள் ஆகியோரின் நலன் மற்றும் நிர்வாக பணிகள் குறித்து ஆராயும் 6வது நிகழ்வு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் தலைமையில் இடம்பெற்றது.

original/inshot_20240609_125517750
 'உறுமய' காணி உறுதி வழங்கும் திட்டத்தில் போர்வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு முன்னுரிமை.

• சேவையில் ஈடுபட்டுள்ள மற்றும் ஓய்வுபெற்ற இராணுவ வீரர்களுக்கு மானிய வட்டி விகிதத்தில் சிறப்புக் கடன் வசதிகல் வழங்கப்படவுள்ளதுடன், ஏற்கனவே பெற்றுக்கொண்ட கடன்களின் மீதான அதிகரித்த வட்டி விகிதங்களை குறைக்கவும் முன்மொழியப்பட்டுள்ளது.

• வெளிநாட்டு வேலைவாய்ப்பு திட்டத்தில் ஓய்வுபெற்ற படைவீரர்கள் மற்றும் போர்வீரர் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு 25% வேலைவாய்ப்புக்கள் ஒதுக்கீடு.

ஓய்வுபெற்ற மற்றும் மருத்துவ ரீதியாக ஓய்வுபெற்ற இராணுவத்தினர் மற்றும் போரில் உயிர் தியாகம் செய்த போர்வீரர்களின் குடும்ப உறுப்பினர்களின் நலன் மற்றும் நிர்வாக விவகாரங்களை ஆராயும் வகையில் இலங்கை இராணுவத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மற்றுமொரு நிகழ்வு New;W (ஜூன் 08) மின்னேரிய காலாட்படை பயிற்சி முகாமில் இடம்பெற்றது. 

இந்நிகழ்வில், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

இந்த நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்துகொள்ள வருகை தந்த பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரை இராணுவத்தின் கிழக்கு கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் ஷெவந்த் குலதுங்க வரவேற்றார்.

குறிப்பாக பொலன்னறுவை மாவட்டத்தில் வசிக்கும் ஓய்வுபெற்ற இராணுவ வீரர்கள் மற்றும் போர்வீரர்களின் குடும்பங்கள் தங்கள் குறைகளை தெரிவிப்பதற்கும் தேவையான ஆலோசனைகளைப் பெறுவதற்கும், இராணுவத் தலைமையக இயக்குநரகங்களின் கீழ் உதவி மையங்களை நிறுவியதுடன் குறித்த இராணுவ வீரர்கள் நிர்வாக ரீதியாக எதிர்கொள்ளும் பிரச்சினைகளை இதன்மூலம் நிவர்த்தி செய்துகொண்டனர்.

படைவீரர்களின் குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகளை இராஜாங்க அமைச்சர் வழங்கினார்.

இந்நிகழ்வில் பொலன்னறுவை மாவட்ட செயலாளர் E.M.D.S ஏக்கநாயக்க, இலங்கை இராணுவத்தின் நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் நலிந்த நியங்கொட உட்பட சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள், ரதேச செயலாளர்கள் மற்றும் அரச அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

( රට වෙනුවෙන් දිවි පිදූ වීරෝධාර රණවිරු පවුල්වල සාමාජිකයින්ගේ හා විශ්‍රාමික /වෛද්‍ය හේතූන් මත විශ්‍රාම ගැන්වූ යුද හමුදා සාමාජිකයන්ගේ සුභසාධන හා පරිපාලන කටයුතු පිළිබඳව සොයාබැලීමේ 6 වන වැඩසටහන ආරක්‍ෂක රාජ්‍ය අමාත්‍යවරයාගේ ප්‍රධානත්වයෙන් පැවැත්වේ )

VIDEOS

Recommended