• முகப்பு
  • இலங்கை
  • தற்போது பெய்து வரும் கடும் மழையினால் புத்தளமும் பாதிப்புக்குள்ளாயுள்ளது

தற்போது பெய்து வரும் கடும் மழையினால் புத்தளமும் பாதிப்புக்குள்ளாயுள்ளது

ஏ. என். எம். முஸ்பிக்

UPDATED: May 19, 2024, 1:27:58 PM

புத்தளம் மாவட்டத்தில் பெய்து வரும் கடும் மழைக் காரணமாக புத்தளம் பிரதேசத்திலுள்ள தாழ்நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளமையினால் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.

original/img-20240519-wa0013
ALSO READ | இலங்கைக்கான சர்வதேச மன்னிப்பு சபை தலைவரின் வருகை அடுத்து இராணுவ முகாம்கள் அகற்றப்பட்டது

புத்தளம் மாவட்டத்தில் நேற்று இரவு முதல் பெய்து வரும் கடும் மழையினால் புத்தளம் பிரதேசத்திலுள்ள தாழ்நிலப் பகுதிகளான கடையாக்குளம், தில்லையடி, ரத்மல்யாய, பாலாவி, குவைட் நகர் மற்றும் பல பிரதேசஙகள் வெள்ளத்தினால் மூழ்கியுள்ளன. 

original/img-20240519-wa0132
இதே வேளை புத்தளம் தள வைத்தியசாலையின் உட் பகுதிகளுக்கும் வெள்ள நீர் சென்றிருப்பதை அவதானிக்க முடிந்தது.

இந்த நிலையில் வீடுகளுக்கள் வெள்ள நீர் உற்புகுந்துள்ளமையினால் சுனார் 150ற்கும் அதிகமான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அத்துடன் சில குடும்பங்கள் உறவினர்களின் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் புத்தள மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

 

VIDEOS

Recommended