• முகப்பு
  • இலங்கை
  • எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எந்தவொரு அரசியல் கட்சிக்கோ அல்லது கூட்டணிக்கோ எமது ஆதரவு இல்லை

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எந்தவொரு அரசியல் கட்சிக்கோ அல்லது கூட்டணிக்கோ எமது ஆதரவு இல்லை

Irshad Rahumathulla

UPDATED: Aug 16, 2024, 11:47:58 AM

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எந்தவொரு அரசியல் கட்சிக்கோ அல்லது கூட்டணிக்கோ எமது ஆதரவு இல்லை என்று தெரிவித்துள்ள சமூக நீதிக் கட்சியின் தலைவர் நஜா முஹம்மத் தமது கட்சி முன் வைத்துள்ள 9 அம்சக் கோறிக்கையினை நடை நடை முறைப்படுத்தும் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் மக்களின் ஜனநாயகமான வாக்குகளை அளிப்பதன் அவசியம் தொடர்பில் தெளிவூட்டும் செயற்பாடுகளில் மட்டும் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவித்தார்.

கொழும்பு டாக்டர் என்.எம்.பெரேரா கேட்போர் மண்டபத்தில் இன்று  இடம் பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் அவர் இதன் போது கருத்து தெரிவிக்கையில் :-

கடந்த ஊடக சந்திப்பின் போது தாங்கள் மக்கள் விடுதலை முன்னணியில் இருந்து விலகியது தொடர்பில் குறிப்பிட்டிருந்தேன்,அதில் எவ்வித மாற்றமும் இல்லை என்பதை இங்கு வலியுறுத்துவதாகவும் அவர் கூறினார்.

கடந்த 76 வருட இலங்கையில் அரசியல் என்பது நாட்டின் அதிகார துஷ்பிரயோம்,ஊழல்கள் போன்ற அரசியலாகவே இருந்துவந்துள்ளது.ஆட்சி முறை மாற்றம் கோரிய போதும்,ஆட்சிக்கு வரும் ஜனாதிபதிகளும்,கட்சிகளும் இன்னும் அந்த பழைய நிலையில் இருந்து மாறவில்லை என்பதையே எம்மால் பார்க்க முடிகின்றது.

இதனால் தான் மக்களும்,இளைஞர்களும் ஆட்சி முறை மாற்றம் ஒன்றின் அவசியத்தை வலியுறுத்தி வருகின்றனர்.தொடர்ந்தும் ஆட்சி கதிரைகளுக்காக அரசியல் கட்சிகள் பிழையான கருத்துக்களை விதைத்து மக்களது வாக்குகளை சூறையாடலாம் என எதர்பார்க்கின்றனர்.

இதற்காக வேண்டி அலையுடன் போக்கில் மக்களது வாக்குகளையும் அள்ளிக் கொள்ளலாம் என எதிர்ப்பார்க்கின்றனர்.இந்த சுழிகளுக்குள் மக்கள் அகப்பட்டுக் கொள்ள வேண்டாம்.

இருந்த போது ஆட்சியாளர்களிடத்தில் நாம் எதனை பெற வேண்டுமோ அதனை தெளிவாக உத்தரவாதத்துடன் பெற்றுக்;கொள்கின்ற வரை மிகவும் அவதானத்துடன் செயற்படுவதை எமது சமூக நீதிக் கட்சி மக்களிடத்தில் கோறி நிற்கின்றது.

முக்கியமாக நாட்டின் தேசிய பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் நழுவல் போக்குகளை கொண்ட வேட்பாளர்கள் தொடர்பிலும்,அது போன்று நாட்டின் பொருளாதார கட்டமைப்பை உருவாக்க முன் வைக்கின்ற கோட்பாட்டு ரீதியான விடயங்களை நடை முறைப்படுத்தும் ஜனாதிபதி வேட்பாளரை மக்களாகிய நீங்கள் அடையாளப்படுத்தி உங்களது வாக்குகளை பயன்படுத்துங்கள் என்று கேட்க விரும்புகின்றேன் என்றார்.

கட்சியின் தவிசாளர் சிராஜ் மசூர் இங்கு கருத்துரைக்கையில் :-

மேற்குறிப்பிட்ட விடயங்களுக்கு அப்பால் சர்வதேச நாணய நிதியத்தின் பிடிக்குள் எமது நாடு சிக்கியுள்ளுத.இதனால் ஏற்படப் போகும் அபாயம் தொடர்பில் எச்சரிக்கைவிடுக்கப்படுகின்றமை தொடர்பில் ஜனாதிபதி வேட்பாளர்கள் தெளிவுபடுத்த வேண்டும்.

கொரோனா கால ஜனாஸாக்களின் எரிப்பு தொடர்பிலும்,வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம்,காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் சகோதரர்களின் போராட்டத்திற்கான நீதி உள்ளிட்ட பல்வேறுபட்ட சமூக விடயங்களுக்கு உரிய நடை முறை சாத்தியப்பாடான தீர்வை வேட்பாளர்களிடம் இருந்து பெற்றுக் கொள்ள வாக்காளர்கள் முயற்சிக்க வேண்டும்.

இது போன்று இன ரீதியான முரண்பாடுகளை தோற்றப்படுத்தும் சக்திகள் தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய சட்டம் சார்ந்த நடவடிக்கைகள் உள்ளிட்ட கோறிக்கைகளை வேட்பாளர்களிடத்தில நாமும் முன் வைக்கின்றோம்.

ஆட்சி மாற்ற பொறி முறையின் மூலம் மட்டுமே நீண்டகால எமது நாட்டின் பல பிரச்சினைகளுக்கான தீர்வை பெற முடியும்,கல்வி,சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் இன்னோரன்ன விடயங்கள் தொடர்பிலும் இதன் போது கருத்துக்களை முன்வைத்தனர்.

தேசிய அமைப்பாளர் அர்க்கம் முனீர் இதன் போது குறிப்பிடுகையில் :-

எமது இந்த கோறிக்கiயானது மக்களுக்கானது,குறிப்பாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையானது.ஜனநாயத்துக்கு பெறும் அடியாகும்.தனிமனித ஆதிக்கம் என்பது இந்த நாட்டின் எத்தனையோ துறைகளை செயலிழக்க செய்துள்ளது.

இது போன்று சிறுபான்மை இனங்கள் மீதான பாராபட்சம்,சட்ட திருத்தம்,போரினால் ஏற்பட்ட சொத்திழப்புக்கள்,உயிரிழப்புக்கள்,பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கான அரசியல் பிரதி நிதித்துவம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில்; நாம் மக்களை தொடர்ந்தும் விழிப் பூட்டல்களை செய்துவருவதுடன்,இதற்கான திட்டங்களை மாவட்ட ரீதியில் முன்னெடுப்பதற்காகவும் தீர்மானித்துள்ளோம் என்றும் கூரினார்.

 

VIDEOS

Recommended