• முகப்பு
  • இலங்கை
  • பிரதேச கலாச்சார விழாவில் இரு ஊடகவியலாளர்க்கு கலாநேத்திரா விருது 

பிரதேச கலாச்சார விழாவில் இரு ஊடகவியலாளர்க்கு கலாநேத்திரா விருது 

வவுனியா

UPDATED: Sep 27, 2024, 3:51:39 PM

வவுனியா பிரதேச கலாசாரவிழாவில் ஊடகம் மற்றும் கட்டுரைக்காக ந.கபிலநாத் மற்றும் பா.குமுதன் ஆகிய இரு ஊடகவியலாளருக்கு கலாநேத்திரா விருது இன்று வழங்கி வைக்கப்பட்டிருந்து.

original/dofoto_20240927_211455312_copy_819x819
குறித்த நிகழ்வானது வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் வழிகாட்டலில் வவுனியா பிரதேசசெயலகமும் பிரதேசகலாச்சார பேரவையும் இணைந்து வருடம்தோறும் நடாத்தி வருகின்றது.

குறித்த நிகழ்வானது இரண்டு பிரிவுகளாக காலை 9மணி தொடக்கம் 12மணி வரை அமரர் கிருஷ்ணபிள்ளை உதயகுமார் நினைவு அரங்கிலும், மாலை2மணி தொடக்கம் 5.30 மணிவரை சின்னப்பு சுபாஷ்சிங்கம் நினைவு அரங்கிலும் நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தது.

original/dofoto_20240927_211516713_copy_819x819
காலை அமர்வில் பிரதமவிருந்தினராக வரலாற்று ஆய்வாளர் அருணா செல்லத்துரை கலந்துகொண்டிருந்தார்.

மாலை அரங்கு வவுனியா பிரதேச செயலாளரும் கலாசார பேரவையின் தலைவருமான நாகலிங்கம் கமலதாசன் தலைமையில் இடம்பெற்றதோடு பிரதம விருந்தினராக தமிழ்மணி அகளங்கன், சிறப்பு விருந்தினராக ஓய்வுநிலை உதவிக்கல்வி பணிப்பாளர் திருமதி வேல்விழி சூரியகுமார், கௌரவ விருந்தினராக நிருத்திய நிகேதன நுண்கலைக்கல்லூரி அதிபர் திருமதி சூரியயாழினி வீரசிங்கமும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது பல்வேறு கலை நிகழ்வுகள் இடம்பெற்றதோடு வவுனியம் நூலும் வெளியிடப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில் கலைஞர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.



 

VIDEOS

Recommended